இன்றைய ராசி பலன்(17-04-2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்பட்டால் நன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். மனதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டாகும்.

மிதுனம்:

இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட குழப்பங்களால் மனக்கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். தந்தை வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:

இன்று தொழில் ரீதியாக சில சிக்கலை சந்திப்பீர்கள். சிலருக்கு மதியம் மேல் எதிர்பாராத நற்செய்தி கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடங்குவதில் சில தாமதம் ஏற்பட்டாலும் நல்ல முடிவை கொடுக்கும்.

சிம்மம்:  

உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகி லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் காப்பது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி:

குடும்பத்தில் சில சிக்கலை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

கொண்டாட்டமாக வாழும் கொடநாடு யானைகள்

கொண்டாட்டமாக வாழும் கொடநாடு யானைகள்

துலாம்: 

உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் உள்ள கவலைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். இறை வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

விருச்சிகம்: 

குழப்பம் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த வேலைகளைச் செய்து முடிப்பீர்.

தனுசு: 

இன்று பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் நடைபெறும். வாழ்க்கை துணையுடன் உண்டான சிக்கல் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

மகரம்: 

வெளியூர் பயணம் லாபம் தரும். நினைத்த வேலை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உதவுவர்.

கும்பம்: 

உங்கள் செயலில் கவனம் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். உங்கள் முயற்சி வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

மீனம்: 

குடும்பத்தில் உண்டான கவலைகள் விலகும். மனதில் சில குழப்பங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் உங்களை தேடி வரும். இழுபறியாக இருந்த வேலை நடைபெறும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US