இன்றைய ராசி பலன்(15-04-2025)

Report

 மேஷம்:

இன்று காலை முதல் உடலில் சிறு சிறு உபாதைகள் உருவாகலாம். இரவு முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் நிதானமாக கையாள வேண்டும். வீண் கோபங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

ரிஷபம்:

மனதில் சந்தோசம் உண்டாகும். நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். குடும்ப உறுப்பினர் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் உண்டான வருமானம் தடை அகலும்.

மிதுனம்:

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனை சரி ஆகும். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் ஆலோசனை உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

கடகம்:

இன்று பிடிவாதத்தை தவிர்ப்பதால் நன்மை உண்டாகும். மனதில் உறுதியும் நம்பிக்கையும் பிறக்கும். உணவு பழக்கவழங்களில் கவனமாக இருக்க வேண்டும். விலகி சென்ற சொந்தம் உங்களை தேடி வருவார்கள்.

சிம்மம்:

 வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைக்கு முடிவு காண்பீர்.

கன்னி:

இன்று பலரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு மதியம் மேல் வேலை பளு அதிகரிக்கும். மூன்றாம் நபரால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். இறை வழிபாடு நன்மை தரும்.

திடீர் என்று கண் திறந்த அம்மன் சிலையால் பரவசமான பக்தர்கள்- எங்கு தெரியுமா?

திடீர் என்று கண் திறந்த அம்மன் சிலையால் பரவசமான பக்தர்கள்- எங்கு தெரியுமா?

துலாம்:

இன்று மனம் பல போராட்டங்களை சந்திக்கக்கூடும். தேவை இல்லாத வாக்கு வாதத்தை தவிர்க்கவும். உடல் நிலையில் அக்கறை செலுத்துவது நன்மை உண்டாகும். வேலையில் நற்பெயர் உண்டாகும்.

விருச்சிகம்:

வரவேண்டிய பணம் வரும். காணாமல் போன பொருள் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.

தனுசு:

பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும். கணவன் மனைவி இடையே சிறு சங்கடங்கள் தோன்றலாம். சகோதரன் வழியில் உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்தி வீடு தேடி வரும்.

மகரம்:

வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம்: 

உங்கள் விருப்பம் இன்று பூர்த்தியாகும். பெரியோர் ஆதரவால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மீனம்:

இன்று எதிரிகளின் உண்மை முகம் தெரிந்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதையும் தாங்கும் மன தைரியம் பிறக்கும். குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US