இன்றைய ராசி பலன் (25.08.2024)

Report

மேஷம்

மனதில் இனம் புரியாத மனக்குழப்பம் அதிகரிக்கும்.இருந்தாலும் நினைப்பது நிறைவேறும் நாள். பழைய பிரசனைகளை சரி செய்து முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.

ரிஷபம்

மனம் சோர்வடையும் நாள்.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்

நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.தொழிலில் நல்ல வரவு இருக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

இன்று சில பிரச்சனைகலள் வர இருப்பதால் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.தேவை இல்லாத நெருக்கடி விலகும் நாள்.வியாபாரி தங்கள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர்.

சிம்மம்

செயல்களில் நிதானம் காப்பது நல்லது. உங்கள் செல்வாக்கு உயரும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி

உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும்.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர்.

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேருமா?கிருஷ்ணர் சொல்லும் பதில்

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேருமா?கிருஷ்ணர் சொல்லும் பதில்


துலாம்

எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

விருச்சிகம்

செய்யும் செயல்களில் இன்று முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் விலகும்.முயற்சியில் லாபம் ஏற்படும்.

தனுசு

உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்களை ஏற்பட வாய்ப்பு உள்ளது.வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல் லாபமடையும். முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம்வரும்.

மகரம்

நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.நன்மையான நாள். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

உங்கள் முயற்சி இழுபறியாகும்.வியாபாரத்தில் ஆதாயமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.

மீனம்

குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும்.வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.தொழிலில் நல்ல வருமானம் வரும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US