இன்றைய ராசி பலன்(22-03-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காலையில் சில சிக்கலான தொலைபேசி அலைபேசி வரலாம். கவனமாக இருந்தால் ஆபத்துகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

ரிஷபம்:

இன்று அலுவலகத்தில் நெருக்கடிகள் அதிகம் ஆகும். மனதில் சொந்த வாழ்க்கையை பற்றிய கவலை மேலோங்கும். குலதெய்வ வழிபாடு சிறந்த பலன் கொடுக்கும்.

மிதுனம்:

வாழ்க்கை துணையின் உதவியால் சில பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு லாபமாக அமையும். வருமானம் அதிகரிக்கும். மன சுமை குறையும்.

கடகம்: 

ஆரோக்கியம் சீராகும். இழுபறியான பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

சிம்மம்:

இன்று பிறரை நம்பி எந்த ஒரு முக்கியமான வேலையை செய்யாதீர்கள். குழந்தைகள் பெற்றோர் கண்டிப்பு ஆளாகக்கூடும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

கன்னி:

 முயற்சி வெற்றியாகும் நாள். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வேலையில் நிதானம் அவசியம். உடன் பணிபுரிபவருடன் பகை வரலாம். உடலில் அசதியும் சோர்வும் ஏற்படும்.

வலிமையான குழந்தை பிறக்க பெண்கள் செய்யவேண்டியவை

வலிமையான குழந்தை பிறக்க பெண்கள் செய்யவேண்டியவை

துலாம்: 

சொத்து விவகாரத்தில் உண்டான பிரச்சனை முடிவு பெரும். நீண்ட நாள் முடிவு பெறாத வேலை ஒன்று முடிவு பெரும். அலுவலகத்தில் நீங்கள் ஏதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்:

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு:

நீங்கள் செய்யும் வேலையில் நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில மன உளைச்சலுக்கு ஆளாகலாம். மனதில் உறுதி உண்டாகும். கடவுள் வழிபாடு மன அமைதி கொடுக்கும்.

மகரம்: 

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். மனக்குழப்பம் உண்டாகும். உடல் சோர்வடையும். பொறுமையுடன் செயல்படுவதால் விரயத்தை தவிர்க்கலாம்.

கும்பம்:

நேற்று வரை கைக்கு வராத பணம் வரும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலுமாக விலகி செல்லும். நீங்கள் திட்டமிட்டபடி வேலை நடக்கும்.

மீனம்: 

உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகி செல்லும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். குலதெய்வ வழிபாடு வரும் ஆபத்தை காக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US