வலிமையான குழந்தை பிறக்க பெண்கள் செய்யவேண்டியவை
ஒரு குடும்பத்திற்கு குழந்தை பாக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. காரணம் குழந்தை தான் நம்முடைய அடுத்த தலைமுறையினரை உருவாக்கும். அந்த வகையில் கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற காலத்தில் அவர்கள் உணவு பழக்கம் தொடங்கி உடல் நலம் என்று அனைத்தும் சரியாக பேணி காக்க வேண்டும்.
அதோடு அவர்கள் கட்டாயம் இறைவழிபாடு செய்வதும் அவசியம். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் சுந்தர காண்டத்தை தினமும் படிக்க அனுமனைப் போல ஆற்றலும் மதிநுட்பமும் கொண்ட குழந்தை பிறக்கும். சுந்திர காண்டத்திற்கு அவ்வளவு சக்தி உண்டு.
அதாவது, கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பர் ராமாயண என்னும் காவியத்தில் 10,500 பாடல்களில் படைத்தார். பால, அயோத்தியா, ஆரண்ய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் இதில் உள்ளன. அவற்றில் சுந்தர காண்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
இதற்கு சிறைபிடிக்க பட்டதா சீதையும் இதற்கு ஒரு காரணம். கடும் தவம் இருந்து பல இன்னல்களுக்கு பிறகு சீதை ராமனை அடைந்த வரலாறைச் சொல்வது சுந்தர காண்டம்.14 படலங்கள் இதில் உள்ளன.
1. கடல் தாவு படலம்
2. ஊர் தேடு படலம்
3. காட்சிப் படலம்
4. உருக் காட்டு படலம்
5. சூடாமணிப் படலம்
6. பொழில் இறுத்த படலம்
7. கிங்கரர் வதைப் படலம்
8. சம்புமாலி வதைப் படலம்
9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
10. அக்ககுமாரன் வதைப் படலம்
11. பாசப் படலம்
12. பிணி வீட்டு படலம்
13. இலங்கை எரியூட்டு படலம்
14. திருவடி தொழுத படலம் இந்த
14 படலத்தை எவர் ஒருவர் படிக்கிறாரோ அவருக்கு அதீத பலன் கிடைக்கும். இதை கர்ப்பிணி பெண்கள் மற்றும் அல்லாமல் நீண்ட நாள் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் மற்றும் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கட்டாயம் இதை படிக்க அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
நீண்ட நாள் மன சிறையில் இருப்பவர்களுக்கு இது மிக பெரிய மருந்தாக அமையும். இதை மனதார படிப்பவர்ககளுக்கு வாழ்க்கையில் எல்லா செல்வமும் கிடைத்து வெற்றி அடைவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |