இன்றைய ராசி பலன்(09.10.2024)

Report

மேஷம்

தொழில் செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்

மனதில் தேவை இல்லாத குழப்பம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.வியாபாரத்தில் சில தடைகளை சந்திக்க வேண்டியது வரும்.

மிதுனம்

வாழ்க்கைத் துணையின் உதவியால் விருப்பம் நிறைவேறும்.கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். நண்பர்கள் உதவியால் நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

நீண்ட மனக்குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் மனம் மாறுவர்.

சிம்மம்

யாரையும் நம்பி உங்களுடைய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். ஒருசிலர் மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாகக்கூடும்.வார்த்தைகளில் நிதானம் தேவை.

கன்னி

தாய்வழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும்.உழைப்பிற்கேற்ற வருமானம் வரும்.பணிபுரியும் இடத்தில் பகை உண்டாகும்.மன அமைதிக்காக கோயிலுக்கு செல்வீர்கள்.

வாழ்க்கை பயத்தை போக்கும் முருகப்பெருமான்

வாழ்க்கை பயத்தை போக்கும் முருகப்பெருமான்


துலாம்

சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும் நாள்.

விருச்சிகம்

நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர்.

தனுசு

கடவுள் வழிபாட்டால் துன்பம் நீங்கும்.எடுத்த வேலையில் உறுதியுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

மகரம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.பொறுமையுடன் செயல்படுவதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.

கும்பம்

நேற்று வராமல் இருந்த பணம் வரும். இடம் சம்பந்தமான பிரச்னையில் முடிவு உண்டாகும்.பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.கடவுள் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும்.

மீனம்

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.எடுக்கும் முயற்சி எளிதாக நிறைவேறும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றம் அடைவீர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US