கோயில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்?
கோயிலின் பிரதான இடம் என்றால் அது கருவறை தான், ஆலயங்கள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும் கோயிலின் கருவறை சிறியதாகதான் இருக்கும்.
வாஸ்துபடி கோயிலை வடிவமைத்த நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.
அதாவது பிரபஞ்சத்தின் கதிர்கள் கருவறைக்குள் உள்ள மூலவர் மீது பாயும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அதாவது கதிர்களில் உள்ள மின்னூட்டம் பெற்ற துகள்கள், கோயில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மீது பட்டு கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.
அங்கிருந்த அலைகள் கோயில் முழுவதும் பரவும் படி அமைக்கப்பட்டிருக்கும்.
இதன் காரணமாகவும் கருவறை இருட்டாக இருக்கும், சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.
இந்த ஆற்றலை பெறுவதற்காகவே இடமிருந்து வலமாக சுற்றும்படியும் சொல்லப்படுகிறது.
கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அவை
1.அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி எனப்படும்.
கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.
இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.
கருவறை பகுதி
கோயில் கட்ட தெரிவு செய்யப்படும் இடத்தில் தானியங்கள் விதைக்கப்படும், இது மூன்று நாட்களில் முளைத்தால் உத்தமமான இடம், 5 நாட்கள் என்றால் மத்திமம், 5 நாட்களுக்கு பின்னர் அதமம்.
உத்தமமான இடங்களில் மட்டுமே கருவறை அமைக்கப்படும், இதனுள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.
சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர்.
கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும்.
கருவறை வெளிப்பகுதி கஜப்ருஷ்டம் வடிவில் இருக்கும், கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள்.
கருவறையின் வெளிப்புற சுவர் யானையின் பின்பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்பது அர்த்தமாம்.