மனிதனுக்கு நல்ல நேரம் இருந்தால் அவன் எதிர்பாராத நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தேறும்.அதுவே அந்த மனிதனுக்கு கெட்ட நேரம் இருந்தால் அவன் நினைத்து கூட பார்க்க முடியாத துன்பங்கள் இருக்கும்.
இது தான் மனிதனுடைய கிரக நிலை.அப்படியாக ஒருவனுக்கு ஏற்படுகின்ற எவ்வளவு பெரிய கெட்ட நேரமாக இருந்தாலும் அதை நல்ல நேரமாக மாற்றும் கோயில் ஒன்று இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் இருக்கிறது.இவை எல்லாம் ஒன்று சேர அமைந்து இருக்கின்ற கோயில் தான் காலதேவி கோயில்.
மேலும் இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் இரவு முழுவதும் இக்கோயில் நடை திறந்து இருக்கும். ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.
அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில்.
கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் நம்மை வியப்பில் ஆழ்த்துவதோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து சொல்லுவது போல் அமைந்து இருக்கும்.அதாவது ”நேரமே உலகம்”என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் அதாவது காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும்.
இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான். பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் அளவில் காணப்படும்.
கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.
கெட்டநேரம் விலகி நல்லநேரம் பிறக்கும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |