கேட்டதை அருளும் முருகப்பெருமானின் தை கிருத்திகை வழிபாடு
மனிதன் வாழ்வில் பிரச்சனைகள் என்பது இயல்பானது தான்.இருந்தாலும் அந்த பிரச்சனைகளை சமாளிக்க பலராலும் முடிவதில்லை.பிரச்சன்னை வரும் பொழுது தாங்கி கொள்ளமுடியாமல் அழுது புலம்புவதை விட இறைவனை சரண் அடைவது சிறந்த பலனை கொடுக்கும்.
அப்படியாக கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமானை எவர் மனதார சரண் அடைகிறார்களோ அவரகள் வாழ்வில் எந்த ஒரு துன்பமும் அண்டுவதில்லை.முருகப்பெருமானை வழிபட பல விஷேச நாட்கள் இருந்தாலும் தை, ஆடி,கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகையில் முருகனை வழிபட அதீத பலன் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக இந்த மாதம் தை கிருத்திகை பிப்ரவரி 6 ஆம் தேதி வரவிருக்கிறது.இந்த நாளில் எந்த வேண்டுதல் இல்லை என்றாலும் அதிகாலை எழுந்து குளித்து முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி மலர்கள் அல்லது ரோஜா மலர்களை வைத்து அலங்காரம் செய்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை சொல்லி அன்றைய தினம் விரதம் இருந்தால் முருகன் அருளால் மனம் தெளிவடையும்.
முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்தாலும் இருக்கலாம் அல்லது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதாக இருந்தாலும் இருக்கலாம்.
உங்கள் வாழ்வில் பிரச்சனையே இல்லாமல் சந்தோஷமாக இருப்பவர்களாக இருந்தாலும் சரி,இல்லை அதீத பிரச்சன்னைகள் கொண்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் முருகப்பெருமானுக்கு உரிய இந்த விஷேச நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்து அவருடைய மந்திரங்கள் சொல்லி வர வீட்டிலும் உங்கள் மனதிலும் நேர்மறை ஆற்றல் பெருகும்.
வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் நபர்கள் எல்லாம் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும் உங்களுக்கு நன்மை செய்யும் மனிதராகவும் இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |