இன்றைய ராசி பலன்(28.01.2025)

Report

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு வேலையில் அதிக அலைச்சலை கொடுக்கும்.மனம் ஒருவித பதட்டத்துடன் காணப்படும்.அலுவலகத்தில் வீண் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்:

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உருவாகும்.எதிர்பார்த்த வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.நீண்ட நாள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.கடன் வாங்கியவர்கள் விரைவில் கடனை அடைப்பீர்கள்.

மிதுனம்:

உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.சொந்தங்களிடம் பேசும் பொழுது மிக கவனமாக பேச வேண்டும்.

கடகம்:

நீங்கள் நினைப்பது நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிரிகளின் தொல்லை விலகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம்:

வியாபாரத்தில் மிகவும் உற்ச்சாகமாக செயல்படுவீர்கள்.சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.நினைத்ததை தைரியமாக சாதிப்பீர்கள்.வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

கன்னி:

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட சிக்கல் விலகும். வருமானம் அதிகரிக்கும்.சகபணியாளரை அனுசரித்துச் செல்லுங்கள். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

ஒரு மனிதனின் முதல் எதிரி யார்?

ஒரு மனிதனின் முதல் எதிரி யார்?

துலாம்:

யாரையும் நம்பி எந்த செயலையும் செய்யாதீர்கள்.நீங்கள் ஈடுபாடும் வேலையில் உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும்.குடும்பத்தில் சிறு சிறு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.

விருச்சிகம்:

செயல்கள் லாபமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.பணியிடத்தில் சில நெருக்கடி தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

தனுசு:

மனதில் நீண்ட நாள் இருந்த கவலைகள் விலகும்.வியாபாரத்தில் உண்டான சிக்கல்களை தவிர்ப்பீர்கள்.இறைவழிபாடு அதிகரிக்கும்.பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும்.

மகரம்:

மதியம்வரை நெருக்கடிக்கு ஆளானாலும் அதன்பிறகு நினைத்தது நிறைவேறும்.இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வாகனப்பயணத்தில் நிதானம் தேவை.அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்:

வரவு செலவில் கவனம் அவசியம். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.மதியம் வரை உங்கள் செயல்கள் லாபமாகும்.

மீனம்:

பிறரை அனுசரித்து செல்வதால் இன்றைய நாள் இனிமையாக அமையும்.பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US