மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா

By Sakthi Raj Oct 22, 2026 06:01 AM GMT
Report

மகாபாரதத்தில் பாண்டுவின் இறுதிக்காலம் நெருங்கிய நேரத்தில் அவருடைய ஐந்து மகன்களையும் அவர் அழைத்து தான் இறந்த பிறகு அவருடைய உடலை தகனம் செய்யாமல் உண்டுவிட்டால் அவர்களுக்கு முற்காலத்தையும் அறியக்கூடிய ஆற்றல் கிடைக்கும் என்று கூறிவிட்டு அவர் உயிர் துறந்து விடுகிறார்.

தந்தையின் உடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற பாண்டவர்கள் முயற்சித்த பொழுது அங்கு வந்து கிருஷ்ண பகவான் அவர்களை தடுத்து பாண்டுவின் உடலை முறைப்படி தகனம் செய்ய அழைக்கிறார்.

எந்த ஒரு மிருகமும் உடலை நெருங்கிடாமல் பாதுகாக்க சகாதேவனை மட்டும் அந்த இடத்தில் விட்டு செல்கிறார்கள். மற்றவர்கள் சென்றதும் தந்தையினுடைய இறுதி வார்த்தைகளை மீற விரும்பாத சகாதேவன் அவருடைய சுண்டு விரலை மட்டும் உடைத்து சாப்பிட்டு விடுகிறான். உடனே அவனுக்கு முற்காலங்களையும் அறியக்கூடிய ஆற்றல் கிடைத்ததாக இந்த கதை கூறுகிறது.

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா | The Secret Behind Sahadeva S Astrological Wisdom

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

பல்லாயிரம் ஆண்டுகள் தவம்.. ஆனால் கண நேர ஆணவம் எல்லாம் அழித்துவிட்டது

பிறகு, சிறிது நேரத்தில் விறகுகளுடன் திரும்பிய கிருஷ்ண பகவான் அவருடைய தலைக்கு மேல் விறகு கட்டை காற்றில் மிதக்க செய்தபடியே வந்தார்.

மற்றவர்களால் அதை காண முடியவில்லை. ஆனால், சகாதேவன் அதை பார்த்து "கண்ணா" உன் விறகு கட்டை காற்றல் காற்றில் மிதந்து தானே வந்தது. பிறகு ஏன் சோர்வு அடைந்தது போல் நடிக்கிறாய் என்று கேட்கிறான்.

அந்த இடத்தில் கிருஷ்ண பகவான் சகாதேவன் அவருடைய தந்தையின் விரலை உண்டதால் தான் இந்த ஆற்றலை பெற்றான் என்பதை நன்கு அறிந்திருந்தார். எதிர்காலம் என்பது இறைவனுடைய ரகசியம் என்றாலும் தனக்குத் தெரிந்தவற்றை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது என்று சகதேவனிடம் சத்தியம் வாங்கி கொண்டார் கிருஷ்ணர்.

காலம் கடந்து பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டபோது, துரியோதனன் சகாதேவனை அனுகி போருக்கான நல்ல நாள் கணித்து கேட்கிறான்.

துரியோதனன் தன்னை அழிக்க நினைக்கிறான் என்பதை சகாதேவன் நன்கு அறிந்திருந்தும். அவருடைய ஜோதிட கணிப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணி கருதிய சகாதேவன் அவனுக்கு போருக்கான தினத்தை குறித்துக் கொடுக்கிறான்.

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா | The Secret Behind Sahadeva S Astrological Wisdom

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது?

மகாபாரதம்: கர்ணனுடைய தலையை துண்டித்த அந்த அஸ்திரம் எது?

குருசேத்திரப் போரில் கர்ணன் உயிரிழக்கும் தருணத்தில் தான் அவன் குந்தி தேவியின் மூத்த மகனும் தங்களுடைய உடன்பிறந்த சகோதரனும் என்பதை பாண்டவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த சகாதேவன் முற்காலத்தையும் அறியும் ஆற்றல் எனக்கு இருந்தும் இவ்வளவு பெரிய உண்மையை முன்னதாகவே அறிய முடியவில்லை என்று அவன் வருந்தினான்.

போர் முடிந்ததும் கிருஷ்ணரை சந்தித்த சகாதேவன் கண்ணா ஜோதிடத்தின் மூலம் எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றால் கர்ணன் என்னுடைய உடன் பிறந்தவன் என்ற உண்மை எனக்கு தெரியவில்லையே.

அப்படி என்றால் ஜோதிடம் பொய்தானே என்று கிருஷ்ணன் கேட்கிறார். கிருஷ்ண பகவான் சொல்கிறார். அதற்கு, கிருஷ்ண பகவான் சொல்கிறார். சகாதேவா எல்லா விஷயங்களையும் நீயே அறிந்து கொண்டு விட்டால் பிறகு நான் எதற்கு என்று பதில் அளித்தார்.

கிருஷ்ணருடைய இந்த பதில் சகாதேவனுடைய ஆணவத்தை முற்றிலும் அடக்கி விட்டது. மனிதன் எவ்வளவு பெரிய அறிவு ஆற்றல் கொண்டு இருந்தாலும் மனிதனால் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியாது என்பதையும் தனக்கு தெரியாதவற்றை உணர்ந்து கொள்ளும் பொழுதே உண்மையான ஞானம் பிறக்கும் என்பதை புரிந்து கொண்டான்.

ஒரு அறிவு மனிதனை உயர்த்தலாம். ஆனால், பணிவு மட்டுமே அவனை ஞானத்தின் பாதையில் கூட்டிச்செல்லும். அதுவே இறைவன் சன்னதியில் அவனை கொண்டு சேர்க்கும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US