12 ராசிகளின் தனித்திறமைகள்.. உங்களுடைய பலம் என்ன தெரியுமா?
ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் வாழ்க்கையில் தனித்துவமான குணமிருக்கும். அதாவது ஒவ்வொரு ராசியினுடைய தன்மைக்கு தகுந்தவாறு அவர்களுடைய திறமைகளை அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார்கள்.
அப்படியாக, 12 ராசிகளும் அவர்களுடைய திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்துவார்கள். எப்படி வெளிப்படுத்துவார்கள். இதில் பெரிய அளவில் சாதனை பெறுவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

வாழ்க்கையில் வெற்றி பெறும் ராசிகள்:
மகரம், கன்னி, ரிஷபம், கடகம்:
இந்த ராசிகள் எப்பொழுதும் கணக்கு போட்டு வாழ்பவர்கள். அதாவது இன்றைய நாட்களுக்கு என்ன தேவை? நாளைக்கு என்ன தேவைப்படும்? என்பதை பற்றி சரியாக ஆராய்ந்து கணக்கு போட்டு வாழக்கூடியவர்கள். அதற்கு தகுந்தார்ப்போல் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்தி கொண்டே அவர்கள் செல்கிறார்கள்.
வியாபாரத்தில் வெற்றி பெறும் ராசிகள்:
சிம்மம், தனுசு, மிதுனம், மீனம்:
இவர்கள் எப்பொழுதும் அவர்களுக்கென்று ஒரு தனி யுக்தியுடன் செயல்பட கூடியவர்கள். அப்படியாக, தொழில் வியாபார யுக்தியை இவர்கள் சரியாக திட்டமிட்டு அதில் சின்ன சின்ன தவறுகள் கூட இல்லாமல் வியாபார தந்திரத்துடன் செயல்பட்டு வியாபாரத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெறுகிறார்கள்.
படிப்பில் வெற்றி பெறும் ராசிகள்:
விருச்சிகம், மேஷம், கும்பம், துலாம்:
இந்த ராசியினர் சிறுவயதில் இருந்து தனக்கென்று ஒரு இலக்கு வைத்து அதனை நோக்கி பயணிக்க கூடியவர்கள். அவர்கள் தன்னுடைய இலக்கில் மட்டும் சரியாக இருப்பார்கள். இதை தான் நம் படிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள். அந்த படிப்பை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |