நாளை பெண்கள் மட்டுமே இழுக்கும் தேர் திருவிழா-எங்கு தெரியுமா?
மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான்.தமிழகம் மட்டும் அல்லாமல் உலகம் எங்கிலும் மக்கள் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.அப்படியாக வருடத்தில் 12 மாதங்களும் இங்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதிலும் குறிப்பாக சித்தரை மாதத்தில் சித்திரை திருவிழா என்பது மிகவும் சிறப்பு பெற்ற விழாவாகும்.அந்த வகையில் மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாகக் அஷ்டமி சப்பரம் என்னும் தேர் திருவிழாவருடாவருடம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதாவது மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில்,சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் விதமாக உலா வருவது வழக்கம்.
அதிகாலையில் கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா நடைபெறும்.
அப்பொழுது சிவாச்சாரியார்கள் தூவி கொண்டே வருவார்கள்.இதில் விஷேசம் என்னவென்றால் பெண்கள் தான் விழாவின் பொழுது அம்மன் சப்பரத்தை இழுத்து வருவார்கள்.மேலும் கீழே சிதறிக்கிடக்கும் அரிசியை பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
பிறகு திருவிழாவின் பொழுது எடுத்து செல்லப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நாம் வேண்டிய காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அதோடு வீட்டில் செல்வ வளம் அதிகரித்து வறுமை ஏற்படாது.
இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் இத்திருவிழா நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சார்பாக செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |