திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளால் கடனை அடைக்க போகும் ராசிகள்

By Sakthi Raj Nov 09, 2024 10:03 AM GMT
Report

வேத ஜோதிடத்தில், சூரியனுக்கு சிறப்பு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.மேலும் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி காலை 8:56 மணிக்கு, சூரியன் சுவாதி நட்சத்திரத்திலிருந்து விசாக நட்சத்திரத்திற்கு மாறினார். இது அனைத்து 12 ராசிகளிலும் ஒரு சில மாற்றங்களை உருவாக்கியது.அதிலும் குறிப்பாக அந்த மாற்றம் மூன்று ராசிகளுக்கு அமோகமான மாற்றத்தை வழங்க இருக்கிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மேஷம்

சூரியன் மாறுவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.திடீர் பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் தேடி வரும்.பழைய கடன்களை அடைக்க நிதி நிலை கூடும்.படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் நல்ல பந்தம் உருவாகும்.குடும்பத்துடன் வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

சனிபகவானின் குரு யார் தெரியுமா?

சனிபகவானின் குரு யார் தெரியுமா?

சிம்மம்

சூரியனின் மாற்றம் சிம்ம ராசிக்கு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகிறது.இந்த மாற்றம் எடுத்த காரியங்களில் வெற்றியை தாரும்.தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.எதிர்பாராத வளர்ச்சி வியாபாரத்தில் உண்டாகும்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உடல்நிலை நல்ல மாற்றம் பார்க்க முடியும்.முதலீடுகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த நேரமாக அமையும்.

விருச்சிகம்

சூரியனின் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் அதிகரித்த தன்னம்பிக்கையையும் கொண்டு வருகிறது.பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் அமையும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.பழைய கடன்களை திருப்பிச் செலுத்த வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும்.உடல்நிலை சீராக இருக்கும், வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் வளர்க்கும். திருமணமாகாத விருச்சிக ராசிக்காரர்களுக்கு நம்பிக்கைக்குரிய உறவுகள் கிடைக்கலாம்.ளமாணவர்கள் தங்கள் கடின உழைப்பை கொடுத்து படிப்பில் தேர்ச்சி பெறுவார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US