தினம் ஒரு திருவாசகம்
2.வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க பு
றத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க
விளக்கம்
மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது. வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் என்பவற்றால் விளங்கும்.
பிஞ்ஞகன்-தலைக்கோலம் உடையவன்;பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள். இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், ‘புறத்தார்க்குச் சேயோன்” என்றார்.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு ஒன்று. நெஞ்சத்தாமரை.
மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி,அதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம் இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார்.சிரங்குவிவார். என்று கூறினார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |