ரக்ஷா பந்தன் 2025: ராக்கி கட்டும் பொழுது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்
உலகம் எங்கிலும் ரக்ஷா பந்தன் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியாக, இந்த ஆண்டு 2025 ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 09 தேதி அன்று வந்திருக்கும் நிலையில் இன்றைய நாளில் நாம் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் பொழுது மறந்தும் சில தவறுகளை செய்யக்கூடாது என்கிறார்கள்.
அதாவது சகோதரன் சகோதிரி உறவுகளின் புனிதத்தையும் அர்த்தத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சகோதரிகளுக்கு அண்ணன்கள் சில பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். இருப்பினும் நாம் ராக்கி கட்டும் பொழுது சில விஷயங்களை பின்பற்ற வேண்டுமாம். இல்லையென்றால் நமக்கு துரதிர்ஷ்டம் உண்டாகும் என்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
1. பொதுவாக நாம் கடவுளை அம்மா அப்பா அண்ணன் என்ற உறவில் வைத்து வழிபாடு செய்வோம். அதனால் கட்டாயம் நாளை முதலில் கடவுள்களுக்கு ராக்கி சமர்ப்பித்து வழிபாடு செய்வது அவசியம். இதனால் நாம் கடவுள் மீது வைத்திருக்கும் அன்பும் பக்தியும் பலப்படும். ஆதலால், நாளை விநாயகர், கிருஷ்ணர் முருகர் போன்ற தெய்வங்களுக்கு ராக்கி கட்டி வழிபாடு செய்வதை மறத்தல் கூடாது. இதன் வழியாக இறைவனின் கருணை பார்வை எப்பொழுதும் நம் மீது இருக்கும்.
2. நாம் எவ்வாறு பல விசேஷ நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் பார்கின்றமோ, அதேப்போல் ராக்கி கட்டும் பொழுது நாம் கட்டாயம் நல்ல நேரம் பார்க்க வேண்டும். தவறான நேரத்தில் ராக்கி கட்டுவது சகோதர உறவுகளுக்கு இடையே சில மன கசப்புகளை உண்டு செய்ய வாய்ப்புகள் உள்ளது.
3. இந்து மதத்தில் வாஸ்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நாம் சகோதரர்களுக்கு ராக்கி கட்டும் பொழுது கட்டாயம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரச்செய்து தான் கட்ட வேண்டும். தவறியும் தெற்கு திசையில் அமரச்செய்து கட்டகூடாது.
4. ராக்கி கயிறுகள் புதிதானதாகவும், ஏற்கனவே உபயோகம் செய்யாத ஒன்றாகவும், பழுதடையாமல் இருப்பது அவசியம். சேதமடைந்த கயிறுகளை கட்டும் பொழுது நமக்கு துரதிர்ஷ்டம் உண்டாகின்றது. அதோடு உறவுகளுக்கு இடையே விரிசலை கொடுத்து விடும்.
5. நாம் சகோதர்களுக்கு ராக்கி கட்டுவதை விட முக்கியமானது அதை முறையாக செய்வது. ஆதலால் ராக்கி கட்டும் முன் நாம் கட்டாயம் ஆரத்தி எடுத்து, அவரது நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது உறவுகளுக்கிடையே இணைப்பிரியா பந்தம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







