இந்த தேதியில் பிறந்தவர்கள் 35 வயதிற்கு மேல் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்களாம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எண் கணிதம் கொண்டு நம் வாழ்க்கையின் எதிர்காலத்தை கணித்து விடலாம். அப்படியாக, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை 35 வயதிற்கு மேல் மிக சிறந்த முன்னேற்றமும் மாற்றமும் பெற்று வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
எண் கணித்தபடி எந்த மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 8 ஆகும். இவர்கள் மிகவும் பொறுமைசாலிகள் ஆவார்கள். எதற்கும் துணிந்தவர்கள். எந்த முயற்சியும் பயம் இல்லாமல் செய்து வெற்றி காண்பார்கள்.
தங்கள் முழு உழைப்பையும் கொடுக்க நினைப்பவர்கள். லட்சியம் வைத்து அதை எளிதாக அடைந்து விடுகிறார்கள். மேலும், இவர்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் பின்னோக்கிய பயணம் செய்வது இல்லை.
அதாவது சிந்தனையாக இருந்தாலும் செயலாக இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியை நோக்கி மட்டும் தான் செலுத்துகிறார்கள். எந்த இடத்திலும் துவண்டு போகாமல் தங்களை ஊக்கப்படுத்துக்கொண்டு முன்னேறி செல்லும் குணம் கொண்டவர்கள்.
இவர்களை யாரேனும் எதாவது சொன்னால் கூட அவர்கள் அதை பெரியதாக பொருட்படுத்தாமல் வெற்றி பாதையை தேடி செல்வதால் இவர்கள் 35 வயதிற்குள் மிக பெரிய சாதனை படைக்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







