நீங்கள் முருக பக்தரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமானை நாம் சரணடைந்து அவருடைய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறுவதை நாம் காணலாம்.
அப்படியாக முருகப்பெருமானை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளது.
முருகப்பெருமானுடைய கைகளில் உள்ள வேல் என்பது சாதாரண ஆயுதம் அல்ல அது குக பிரம்மத்தின் வடிவம். மற்ற அஸ்திரங்கள் முருகப்பெருமான் ஏவினால்தான் செயல்படும் ஆனால் முருகப்பெருமானின் வேல் தானாகவே செயல்படக்கூடிய அற்புதமான ஆற்றல் உடையது.
கோவில் விக்ரகங்கள் அந்தந்த கோவிலின் ஆகம முறைப்படி உள்ள தியான ஸ்லோகங்களின்படியே வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஸ்லோகங்கள் வேலில்லாமல் முருகன் இல்லை என்று நமக்கு எடுத்துரைக்கிறது.
அதோடு, திருப்புகழில் அருணகிரிநாதர் "நடத்து குகன் வேலே" என்று பாடியதன் வழியாக வேல் எந்த நேரமும் முருகப்பெருமானுடன் பக்தர்களுக்கு துணையாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. மேலும், முருக பெருமானுடைய வேல் மற்றும் அவருடைய சிறப்புகள் என்னவென்று நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |