அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான வாழ்க்கை நீதி
வாழ்க்கை மிகவும் சிறியது.இதில் நாம் பிறர் மீது கோபம்,வன்மம் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடந்திடவில்லை.ஏன்!நம் உடலே நமக்கு சொந்தம் இல்லை என்ற போதில் பிறருடன் இருக்கும் பகையும்,வெறுப்பும் எந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் வெற்றியை கொடுத்திட போகிறது.
நிச்சயம் இல்லாத வாழ்வில் பலரும் அவர்களை காப்பாற்றிட உயர்த்திட துடிக்கிறார்கள்.அவர்களை உயர்த்திட பிறர் மனம் வாடினாலும் பரவாயில்லை என்ற நிலைமைக்கு செல்கிறார்கள்.அப்படியாக மனம் வாடுபவர்கள் தான் செய்வதறியாமல் அவர்களை காயப்படுத்துபவர்களுக்கு ஏதேனும் சாபம் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த உலகம் மிகவும் சிறியது.அதாவது நாம் நினைத்து கொள்கின்றோம்.நாம் பேசுவதையும், பிறரை பற்றி நினைப்பதும் யாருக்கும் கேட்கப்போவதில்லை என்று.ஆனால் உண்மையில் நாம் பேசுவதை இந்த பிரபஞ்சம் கேட்டு கொண்டு தான் இருக்கிறது.பிறரிடம் நாம் வாய்திறந்து மனதில் உள்ளதை சொல்லவில்லை என்றாலும் நீங்கள் நினைப்பதை அவர்களால் புரிந்து கொள்ளமுடியும்.அது தான் பிரபஞ்சம் நடத்தும் அதிசயம்.
அந்த வகையில்,எப்படி வாழவேண்டும்.எப்படி வாழக்கூடாது என்று நம்முடைய வரலாறு நமக்கு நிறைய பாடங்கள் விட்டு சென்று இருக்கிறது.அதாவது தொட்டுக் கெட்டவன் இந்திரன். தொடாமல் கெட்டவன் இராவணன். சொல்லிக் கெட்டவன் விசுவாமித்திரர். சொல்லாமல் கெட்டவன் அரிச்சந்திரன்.கொடுத்து கெட்டவன் கர்ணன்.கொடாமல் கெட்டவன் துரியோதனன்.
இந்த உலகம் நீங்கள் எதை செய்தாலும் எதோ ஒரு குறை சொல்லத்தான் போகிறது.ஆக பிறரை துன்பப்படுத்தாமல் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே அது ஒரு சிறந்த வாழ்க்கை தான்.
ஆக மனம் வருந்தி தோய்ந்து போகும் அளவிற்கு இந்த உலகில் எதுவும் நிரந்தரம் அல்ல.என்றோ ஒரு நாள் நாம் விரும்பியது நம்மை விட்டு போகும் காலம் வரும்.என்றோ ஒரு நாள் நாம் நம்மை விரும்பியவர்களிடம் இருந்து விடை பெரும் சூழல் வரும்.
இவ்வளவு தான் வாழ்க்கை.இதில் நொடி பொழுதை அனுபவித்து இறைவனை மனதில் நிறுத்தி நன்றி உணர்வுடன் வாழ்வோம்.நம் உயிர் நம் உடலில் இருக்கும் வரை நம்முடைய கடமை இன்னம் முடியவில்லை என்று அர்த்தம்.காத்திருங்கள்.நேரம் வரும் பொழுது விடை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |