நம் வீட்டு வாசலில் இந்த பொருட்களை கட்டினால் கண் திருஷ்டியே வராதாம்

By Sakthi Raj Sep 18, 2026 07:15 AM GMT
Report

பொதுவாக, ஒவ்வொருவர் வீட்டு வாசல்களிலும் ஏதேனும் ஒரு தெய்வீகப் பொருட்கள் கட்டியிருப்பதை நாம் பார்க்கலாம். அதற்கு பின்னால் நிறைய காரணங்கள் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

அந்த வகையில், வீடுகளில் மாவிலை கட்டுகின்ற பொழுது நமக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. மகாலட்சுமியின் அருளால் வீடுகளில் செல்வம் பெருகுகிறது.

அதேபோல், வீட்டை சுற்றி இருக்கக்கூடிய காற்றை சுத்தப்படுத்துகிறது. எலுமிச்சை மற்றும் மிளகாய் சேர்த்து கட்டுகின்ற பொழுது நம்முடைய கண் திருஷ்டி விலகுகிறது.

நம் வீட்டு வாசலில் இந்த பொருட்களை கட்டினால் கண் திருஷ்டியே வராதாம் | Things Hang On Your Door Step To Remove Devil Eye

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

வீடுகளை நோக்கி வரக்கூடிய எதிர்மறை ஆற்றல் நீங்குகிறது. பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. அருகம்புல் மற்றும் துளசியை கட்டுகின்ற பொழுது நேர்மறை ஆற்றல் நம் வீட்டை சுற்றி வருகிறது. ஆரோக்கியம் நலம் பெறுகிறது.

அதை போல், வீட்டு வாசலில் படிகாரம் கட்டுகின்ற பொழுது திருஷ்டி நீக்கி தீய சக்திகளை நெருங்க விடாமல் தடுக்கிறது. மஞ்சள் மற்றும் குங்குமம் வாசலில் இருக்கின்ற பொழுது தெய்வீக கடாட்சம் மற்றும் பாதுகாப்பு உணர்வை நமக்கு கொடுக்கிறது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US