ஆடி அமாவாசையில் தவறியும் இந்த 10 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்
நம்முடைய குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை மனம் மகிழ்வைக்கும் நாளாகவும் நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடவும் சிறந்த நாளாக ஆடி அமாவாசை தினம் இருக்கிறது.
அப்படியாக, இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை, அன்று வருகிறது. அன்றைய தினம் நம் வீடுகளில் மறக்காமல் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. ஆடி அமாவாசை அன்று நாம் பிறரிடம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
2. அன்றைய தினம் வீடுகளில் இருந்து பணம் தவிர்த்து வேறு பொருட்களையும் நாம் கொடுக்கக்கூடாது.
3. ஆடி முதல் அமாவாசை அன்று வாசலிலும் பூஜை அறைகளிலும் நாம் கோலம் போடுதல் கூடாது.
4. ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும், கட்டாயமாக காகத்திற்கு நம் வீடுகளில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும்.
5. அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது.
6. கட்டாயம் அன்றைய தினங்களில் செய்யக்கூடாத ஒன்று அமாவாசை அன்று வீடுகளில் அசைவ உணவுகளை சமைக்கவோ சாப்பிடக் கூடாது. காரணம், அமாவாசை நாளில் நாம் அசைவ உணவுகளை சமைக்கக்கூடாது என்பது ஐதீகம்.
7. ஆடி அமாவாசை அன்று, காலையில் வீட்டையோ, சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்யக் கூடாது. ஆடி அமாவாசைக்கு முந்தைய நாளிலே நாம் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
8. நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
9. ஆடி அமாவாசை நாளில் காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இடக்கூடாது.
10. முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







