ஆடி வெள்ளி இன்று மறக்காமல் இந்த பொருட்களை வாங்குங்கள்

By Sakthi Raj Aug 09, 2024 06:55 AM GMT
Report

ஆடி வெள்ளி கிழமை என்றாலே மிகவும் விஷேசம் ஆன நாள்.அன்றைய தினத்தில் அம்மனை வழிபட வாழ்க்கையில் மங்களம் நிறையும்.

மேலும் இந்த வார ஆடி வெள்ளிக்கிழமையில் கூடுதல் சிறப்பாக கருட பஞ்சமி வந்திருப்பது இன்னும் விஷேசம். மேலும் இந்த நாளில் நான்கு நட்சத்திரங்கள் ஒருசேர வந்திருப்பது இன்னும் கூடுதல் விஷேசம்.

அப்படியாக பல விஷேசங்கள் ஒரு சேர வந்திருப்பது அதிசயம் என்பதால் இந்த நாள் அன்று நாம் தவறாமல் இறைவழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நடக்கும்.

ஆடி வெள்ளி இன்று மறக்காமல் இந்த பொருட்களை வாங்குங்கள் | Things To Buy In Friday For Poojai

அது மட்டும் இன்றி வீட்டில் நீண்ட பண கஷ்டம் இவை எல்லாம் விலகும்.மேலும் இந்த நாளில் நாம் இறைவனை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்பவர்கள்வழக்கம் போல செய்து கொள்ளலாம். அதே போல பஞ்சமி வழிபாடு விரதம் இருப்பவர்களும் அன்றைய வழிபாட்டு முறைகளை முறையாக கடைப்பிடியுங்கள்.

விபத்தில் இருந்து நம்மை காக்கும் கருட பஞ்சமி வழிபாடு

விபத்தில் இருந்து நம்மை காக்கும் கருட பஞ்சமி வழிபாடு


அத்துடன் இன்றைய இரவு தேங்காய் மஞ்சள் இந்த இரண்டையும் நாம் மறக்காமல் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் மஞ்சளாக வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்று கடையில் இதை வாங்கி மறுபடியும் வீட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ஆடி வெள்ளி இன்று மறக்காமல் இந்த பொருட்களை வாங்குங்கள் | Things To Buy In Friday For Poojai

இந்த இரண்டையும் வாங்கி மஹாலக்ஷ்மி தயார் முன் வைத்து வழிபாடு செய்யவேண்டும்.பூஜை முடிந்த பிறகு நாம் அதை சமையலுக்கு பயன் படுத்தலாம்.

இந்த ஒரு வழிபாட்டை நாம் பின்பற்றுவதின் மூலம் நமக்கு மஹாலக்ஷ்மியின் அருளும் பஞ்சமி நாயகியான வாராகியின் அருளும் கிடைத்து துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US