ராம நவமி அன்று நாம் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள்
இன்று(06-04-2025) ராமநவமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தான் மஹாவிஷ்ணுவின் 7வது அவதாரமான ஸ்ரீ ராமர் பூமியில் மனிதனாக அவதாரம் எடுத்தார். இன்றைய தினம் நாம் ஸ்ரீ ராமரை விரதம் இருந்து வழி பாடு செய்வது நமக்கு அனைத்து விதமான நலனையும் பெற்று கொடுக்கும்.
அப்படியாக, விஷேச தினமான ராம் நவமியில் நாம் சில முக்கியமான பொருட்களை வாங்குவதால் நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் நடக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
மனிதனாக பிறந்தால் இன்பம் துன்பம் கடந்தாகவே வேண்டும் என்று உணர்த்தும் வகையில் ராமர் வாழ்ந்து காட்டி இருக்கிறார். மனிதர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு சிக்லகள் வந்து செல்லும். மேலும் மனிதனின் பிறப்பு ஒரு பிறவியோடு முடியாத ஒன்று. ஆதலால், நாம் செய்யும் நன்மையையும் தீமையும் நாம் அடுத்து எடுக்கும் பிறவிகளிலும் தொடரும் என்று நம்பப்படுகிறது.
அதனால் தான் யாருக்கும் தீங்கு செய்யலாம், பிறர் மனதை புண் படுத்தாமல் வாழ வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில், மனிதன் ஏதோ ஒரு கால சூழ்நிலையால் சில தவறுகள் செய்து விடலாம். அவர்கள் செய்யும் கடமைகளில் இருந்து தவறி இருக்கலாம்.
அதனால் அவர்கள் இப்பொழுது துன்பம் அனுபவிக்கும் காலமாக இருக்கும். அவர்கள் அதில் இருந்து விடு பட இந்த ராமநவமியில் ஸ்ரீ ராமரைவழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும். மேலும் , இன்றைய தினம் நாம் ஸ்ரீ ராமரை நினைத்து வீட்டில் சில பொருட்கள் வாங்கினால் ராமரின் அருள் கிடைத்து நமக்கு வாழ்வில் நல்ல வளம் பெறலாம்.
மிகவும் சிறந்த நாளான இன்று நாம் சுந்தர காண்டம் படித்தால் நமக்கு மன வலிமை கிடைக்கும். இன்றைய தினம் ஒரு சுந்திர காண்டம் வாங்கி அதை பூஜை அறையில் இரண்டு பூக்களை போட்டு "ராமா ராமா" என்று சொன்னால் மேலும் மேலும் புண்ணியம் வந்து நம்மை சேரும்.
அதே போல், இன்று யாரெல்லாம் வீட்டில் ராமரின் பாட்டாபிஷேகம் படத்தை பார்க்கிறீர்களோ அவர்கள் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று முடிந்தால் இன்று 4 பேருக்கு நீர் மோர் வாங்கி தானம் செய்வதால் நமக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்.
இன்று மனதில் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லிக்கொண்டு இருக்க நமக்கு உண்டான கவலைகள் எல்லாம் விலகி விடும். ராமர் மனிதனாக பிறந்து பல துன்பங்களை மிகவும் நேர்மையாக கடந்து வாழ்ந்து காட்டியவர். அவரை வழிபாடு செய்வது நமக்கும் மனத்தூய்மை கிடைப்பதோடு, அவரின் அருளால் நமக்கு சந்தோஷங்கள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |