வீட்டில் தெய்வீக சக்தியை உணர இந்த விஷயங்களை கடைப்பிடியுங்கள்
மனிதன் வாழும் இந்த நிலையில்லாத வாழ்க்கையில் இறைவழிபாடு தான் நமக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. அப்படியாக, நம்முடைய இந்துக்களின் வீட்டில் பூஜை அறைக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
அதை கோயில் போல் கருதி சுவாமிக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றோம். அந்த வகையில், நாம் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் தெய்வங்களுடைய முழு அருளையும் நாம் பெற்று விட முடியும் என்று சொல்லவிட முடியாது.
சில நேரங்களில் நாம் செய்யும் பூஜைகளும் இறைவனை சென்று அடைவதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. அதாவது, திடீர் என்று நாம் பூஜை அறையில் மாட்டியிருக்கும் தெய்வங்களுடைய படம் உயிர் அற்றதாக காணப்படும்.
ஆத்மார்த்தமாக உண்மையான பக்தியோடு இறைவழிபாடு செய்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். இத்தனை நாள் நம்முடன் பேசிய தெய்வங்களுடைய உருவம் வெறும் படமாக காட்சி கொடுக்கும். இதற்கு சில கெட்ட நேரங்களும் காரணம் என்றே சொல்லலாம். அவ்வாறான வேளையில் நாம் பூஜை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
மனிதர்களுக்கு எவ்வாறு கண் திருஷ்டி ஏற்படுகிறதோ அதே போல் பூஜை அறைக்கும் கண் திருஷ்டி உண்டாகும். அதனால் வாரம் ஒருமுறை பூஜை அறையை கல் உப்பு தண்ணீர் கொண்டு சுத்தமாக துடைத்து விட வேண்டும். அதோடு சேர்த்து, மீண்டும் நல்ல தண்ணீரை துணியில் தொட்டு பூஜை அறையை முழுமையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் ஒரு பொழுதும் ஒட்டடை தங்கவிட கூடாது. பூஜைக்கு பயன் படுத்திய பூக்கள் வாடிய நிலையில் இருந்தால் அதை உடனே அகற்றி விடவேண்டும். பயன்படுத்தாத பொருட்கள் எதையும் பூஜை அறையில் வைக்க கூடாது.
வாரம் ஒரு முறை கட்டாயம் சுவாமி படங்களையும் தண்ணீர் வைத்து துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையை எப்பொழுதும் இருட்டாக வைத்திருக்க கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பூஜை அறையில் அமர்ந்து சுவாமியின் மந்திரங்கள், சுவாமியின் திருநாமங்கள் சொல்லி வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது அந்த மந்திரங்களே நம் வீட்டை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்ட செய்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |