சனி கண்டு இனி பயப்படத்தேவை இல்லை.. காரணம் தெரிந்தால் வியந்துபோவீர்கள்!
ஜோதிடத்தில் சனி முக்கியமான கிரகமாக இருக்கிறார். அப்படியாக, ஜாதகத்தில் சனி பகவான் பார்க்கும் இடம் மற்றும் அவர் அமர்ந்து இருக்கும் இடம் பொறுத்து நமக்கு பலன் மாறுகிறது.
அந்த வகையில், ஜாதகத்தில் சனி பகவான் அமர்ந்து இருக்கும் இடம் வைத்து நாம் அவர் செயல்பாடுகள் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக, சனி பகவான் எப்பொழுதும் தாமதப்படுத்துவார் ஆனால் மறுப்பதில்லை. அதை பற்றி பார்ப்போம்.

1-ம் பாவம் – சனி பகவான் ஜாதகருக்கு தன்னம்பிக்கையை தாமதமாக கொடுத்தாலும் வலிமையான ஆளுமையை கொடுக்கிறார்.
2-ம் பாவம் – செல்வம், பொருள் சேர்க்கை தாமதமாக கிடைத்தாலும் நிலையானதாகவும், கிடைக்கின்ற செல்வத்தை எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்.
3-ம் பாவம் – வெற்றி தாமதமாக கிடைக்கும். ஆனால், விடாமுயற்சியும் துணிந்து போராடக்கூடிய தன்மையும் அதிகரிக்கும்.
4-ம் பாவம் –குடும்பத்தில் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்கு தாமதமானாலும், காலம் கடந்தாலும் குடும்பத்தில் நல்ல புரிதல் அமையும்.
5-ம் பாவம் – இந்த இடத்தில் சனி பகவான் குழந்தை பாக்கியம் தாமதமானாலும் காலம் கடந்து நல்ல மகிழ்ச்சியான நல்ல குழந்தையை கொடுக்கிறார்.
6-ம் பாவம் – இங்கு வெற்றிகள் மற்றும் எதிரிகளை ஜெயிப்பதற்கு கால தாமதம் ஆனாலும் எதிரிகளே இல்லாத அளவிற்கு நம்மை வாழ வைக்கிறார்.

7-ம் பாவம் – திருமணத்தை தாமதப்படுத்தலாம். ஆனால், நல்ல புரிதல் கொண்ட உறுதியான வாழ்க்கை துணையை கொடுக்கிறார்.
8-ம் பாவம் – வாழ்க்கையில் மாற்றங்கள் நடப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், மன வலிமை யாரும் அசைக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
9-ம் பாவம் – அதிர்ஷ்ட வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். ஆனால், நல்ல அனுபவமும் ஞானமும் சேர்ந்து நம்மை உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும்.
10-ம் பாவம் – தொழில் ரீதியாக உயர்வு மற்றும் நிலைத்தன்மை தாமதம் ஆகலாம். ஆனால், நிலைத்த பெயரும் புகழையும் பெற்று கொடுக்கிறார்.
11-ம் பாவம் – வியாபாரத்தில் லாபம் கிடைப்பதற்கு தாமதமாகலாம். ஆனால், நீண்ட கால செல்வத்தை உருவாக்கிக் கொடுக்கிறார்.
12-ம் பாவம் – மன அமைதியை பெறுவதற்கு தாமதமாகலாம் ஆனால் ஆழமான ஆன்மீக வளர்ச்சியை கொடுத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |