அஷ்டமி நவமியில் நல்ல காரியங்கள் செய்யலாமா?
பொதுவாக எந்த ஒரு காரியம் செய்தாலும் அதற்கு நல்ல நாள் நேரம் பார்த்து தான் செய்வோம்.அப்படி இருக்க அஷ்டமி நவமி நாளில் நாம் நல்ல காரியத்தை தொடங்கலாமா?கூடாதா?என்பது பற்றி பார்ப்போம்.
இத்தனை குழப்பங்கள் கொண்ட நாளான அஷ்டமியில் தான் கிருஷ்ணர் பிறந்தார்,பிறகு நவமியில் ராமர் பிறந்தார்.
இருந்தாலும் நாம் அந்த நாளில் நல்ல காரியத்தை செய்ய தயக்கம் காண்பிக்கின்றோம்.அது ஏன் என்று பார்ப்போம்.
சாதாரணமாக அஷ்டமி, நவமியில் செய்யும் காரியங்கள் நல்ல முடிவில் முடியாது என்பது ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.
ஆனால்,8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி.
அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இது பொருந்து, அதே சமயம் , 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண்.
மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள்.
அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.
அடுத்ததாக நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும்.
இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
செய்யும் செயல் நல்ல படியாக முடியவேண்டும்.ஆனால் இந்த அஷ்டமி நவமியில் எடுத்த காரியங்கள் சட்டென முடிவிற்கு வராமல் அது இழுத்து கொண்டே போகும் என்பதால் அந்த நாளில் செய்யும் நல்ல காரியங்களை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |