ரோட்டில் தெரியாமலும் இந்த பொருளை மிதித்து விடாதீர்கள்
நாம் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம்.ரோட்டில் நடக்கும் பொழுது சில பொருட்களை மிதிக்க கூடாது என்று.அதில் முக்கியமான சில விஷயங்கள் எலுமிச்சை, குங்குமம், மஞ்சள் இதை நாம் தெரியாமலும் மிதித்து விட கூடாது.கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
அதாவது காலம் கடந்தாலும் உலகம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தாலும் சில நம்பிக்கைகள் நம்மை விட்டு போவதில்லை.அதில் ஒன்று தான் தாந்திரீகம்.அப்படியாக ஜோதிடத்தின் படி நாம் ரோட்டில் நடக்கும் பொழுது எரிந்த மரக்கட்டைகள் இருந்தால் மிதிக்க கூடாது.
காரணம் ஒன்று அந்த மரக்கட்டையால் மனிதர்களை தகனம் செய்வது. அல்லது அந்த மரக்கட்டையை வைத்து ஏதாவது தாந்திரீக பரிகாரம் செய்யலாம்.ஆதலால் அவை தவறுதலாக கூட மிதிக்க கூடாது.மேலும்,நன்மையோ தீமையோ இந்த ஆற்றல் முதலில் தலை வழியாகத்தான் செல்லும்.
ஆதலால் ரோட்டில் முடி பார்த்தால் விலகி சென்று விடவேண்டும்.மேலும் உணவு என்பது நமக்கு உயிர் கொடுக்கும் முக்கிய பொருள்.அதை எப்பொழுதுமே நாம் போற்றி வணங்க வேண்டும்.ஆனால் அந்த உணவு பொருளான தானியங்களிலும் மந்திரம் செய்வார்கள்.
ஆதலால் தவறியும் நாம் ரோட்டில் செல்லும் பொழுது கீழே இருப்பதை பார்த்தால் தொடவோ மிதிக்கவோ கூடாது.பெரியவர்கள் சொல்வது போல் வளையல்கள், குங்குமம், மஞ்சள், கற்பூரம், கருப்பு துணிகள், கிழிந்த செருப்புகள், எலுமிச்சை, மிளகாய், கிராம்பு போன்றவை ரோட்டில் இருந்தால் அவற்றின் மேல் தவறுதலாகக் கூட கால் வைக்கக்கூடாது.
இல்லையெனில் எதிர்மறை ஆற்றல் உடலுக்குள் செல்லும்.இத்தனை விஷயங்கள் கடக்கவேண்டும் என்பதால் தான் பெரியவர்கள் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது கை கால்கள் கழுவி விட்டு வரவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |