விளக்கேற்றும் பொழுது மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள் என்ன?
நம்முடைய ஆன்மீகத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அப்படியாக விளக்கேற்றும் பொழுது நாம் நிறைய முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
வேதத்தின்படி நாம் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றலாம். ஆனால் நாம் மேற்கு மற்றும் தெற்கு திசையில் விளக்கேற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதைப்போல் எப்பொழுதும் நம் வீடுகளில் வாசல் தெளித்து கோலமிட்ட பிறகு பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும்.
பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து பின் அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தை ஏற்றிக்கொண்டு அதன் மூலம் வாசலில் உள்ள தீபத்தை ஏற்ற வேண்டும். தினம் தோறும் கட்டாயம் ஒரு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.

நாம் விளக்கேற்றும் பொழுது பருத்தியாலான பஞ்சுதிரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு வீட்டிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றலாம்.
அதிலும் தாமரை தண்டிலான திரியில் ஏற்றும் விளக்கிற்கு அதிக அளவிலான பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. விளக்கேற்ற சிறந்த எண்ணெயாக பசு நெய் நல்லெண்ணெய் இருக்கிறது. ஆனால், இந்த இரண்டையும் கலந்து நாம் ஒருபொழுதும் வீடுகளில் விளக்கேற்றக் கூடாது.

அதேபோல் நாம் நிறைய இடங்களில் பஞ்ச தீப எண்ணெய் என்று கேள்விப்பட்டிருக்கும். அதாவது வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் இழுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்தது தான் பஞ்ச தீபம் ஆகும்.
இந்த எண்ணெய்களை தனித்தனியாக கொண்டு தீபங்கள் ஏற்ற வேண்டும். மாறாக ஐந்து எண்ணெயையும் ஒன்றாக கலந்து விளக்கு ஏற்றுவது தவறானதாகும். அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் கலந்த தீபம் ஏற்றுவது சாஸ்திரத்தின் அடிப்படையில் உகந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |