நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மாசி மாதத்தின் முக்கிய விஷேசங்கள்
தமிழ் மாதங்களில் 12 மாதங்கங்களும் ஒவ்வொரு சிறப்புகளை கொண்டுள்ளது.அப்படியாக 10 வது மாதமான மாசி மாதம் பல மகத்துவம் நிறைந்த மாதமாகும்.அப்படியாக நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மாசி மாதத்தின் முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக,மாசி மாதத்தை கும்ப மாதம் என்பார்கள்.இந்த மாசி மாதத்தில் தான் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன.
1.மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிக முக்கியமாக கருதப்படுகிறது.இந்த ஆண்டு மாசி 29ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை (13.03.2025) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் நாம் இறைவழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
அதாவது கருணை கடவுளான அண்ணாமலையார் தன்னுடைய பக்தனுக்காக திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான்.ஆதலால் தான் அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
2.நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் வடஇந்தியாவிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் முக்கியம் விஷேசமாக இந்த மாசி மகம் இருக்கிறது.இந்த விழாவை மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் நாம் கடல் மட்டும் நீர் நிலைகளில் நீராடுவது புண்ணிய பலனை கொடுக்கிறது என்கிறார்கள்.
மேலும் நம்முடைய தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது.அந்த வகையில், வரும் (12.03.2025) புதன் கிழமை அதாவது, மாசி 28ஆம் தேதி மாசி மகத்தன்று இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
3.ஒவ்வொரு மாதத்தில் வரும் சிவராத்திரியும் மிகவும் விஷேசமானது.அதிலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி கூடுதல் விசேஷம் பெற்றது.இந்த நாளில் நாம் கண்விழித்து இறைவழிபாடு செய்வது நமக்கு வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.
அந்த வகையில், வரும் 26.02.2025 புதன்கிழமை அதாவது மாசி 14ஆம் தேதியன்று அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவாராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.சிலர் அன்றைய தினத்தில் அவர்கள் குலதெய்வம் சென்று வழிபாடு செய்வார்கள்.அவ்வாறு சென்று அங்கு கண்விழித்து வழிபாடு செய்வதும் அவர்கள் குடும்பத்தில் சந்தோசம் கொண்டு வரும்.
4.இந்த மாசி மாதத்தில் தான் பெண்களுக்கு உண்டான சக்தி வாய்ந்த காரடையான் நோன்பு வருகிறது.வீரமும், விவேகமும், பக்தியும் உடைய பெண்ணான சாவித்திரி எமதர்மனிடம் இருந்து கணவனைத் திரும்பப் பெற நோற்ற நோன்பே காரடையான் நோன்பாகும்.
இந்நோன்பு மாசி கடைசி நாளில் ஆரம்பிக்கப்பட்டு, பங்குனி முதல் நாளில் முடிக்கப்படுகிறது.இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்தால் அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,கணவன் குழந்தைகள் ஆயுளும் பெருகும் என்று நம்பப்படுகிறது.
5.மேலும்,மாசி மாதத்தில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.மாசி மகத்தன்று விரதமிருந்து இறைவனை மனதார வழிபாடு செய்தால் அவர்களுக்கு இறைவன் அருளால் நினைத்ததை சாதிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |