புரட்டாசி வெள்ளிக்கிழமை என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது?
புரட்டாசி மாதம் பிறந்து விட்டது.புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்று நாம் எல்லோருக்கும் தெரியும்.அதே போல் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அந்த நாளில் மகாலட்சுமியை தாயாரை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் மிகவும் விசேஷமானது .இவ்வாறு வழிபாடு செய்ய நாம் வீட்டில் நீண்ட நாள் பண கஷ்டம் விலகும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை
ஒவ்வொரு வெள்ளி அன்று லட்சுமிதேவியை வழிபாடுசெய்வதோடு சில முக்கியமான விஷயங்களை பின்பற்றினால் வீட்டில உள்ள துன்பங்கள் விலகி சகல சௌபாக்யங்களை கிடைக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவிக்கு கற்பூர தூபம் வீடு முழுவதும் காண்பிக்க வீட்டில உள்ள நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும். மேலும்,வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் இதன்மூலம் பணப் பற்றாக்குறை தீரும்
வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை
வெள்ளிக்கிழமையன்று வீடுகளில் புளிப்பு சுவை கொண்ட உணவு வகைகளை சமைப்பது மற்றும் பழங்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. அதேசமயம் வெள்ளிக்கிழமை இனிப்பு சுவை கொண்ட பொருட்கள் வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நாள்.
ஏன் என்றால் லட்சுமி தேவியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக்கூடாது எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் உறவினர்களாக இருந்தாலும்,வெள்ளிக்கிழமை யாரும் மறந்தும் கடன் கொடுக்கக்கூடாது.அவ்வாறு வெள்ளிகிழமை அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |