சனிக்கிழமை அன்று மறந்தும் இந்த பொருட்களை தானம் செய்யாதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரிய முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சனிக்கிழமை சனி பகவானின் வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். அன்றைய தினம் நாம் சனியின் பாதிப்புகள் குறைய சனி பகவானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.
காரணம், கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். அவர் எல்லோருக்கும் தகுந்த பாடத்தை கற்று கொடுப்பதில் நீதி தவறாதவர். அதனால், சனி தசை மற்றும் சனி பெயர்ச்சி காலங்களில் பலரும் துன்பப்படுவதை நாம் பார்க்கமுடிடியும்.
அதனால் அவருடைய தாக்கமும், பாதிப்பும் குறைய நாம் சனிக்கிழமைகளில் அவருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும். அதோடு பிற நாட்களை காட்டிலும் நாம் சனிக்கிழமைகளில் சில முக்கியமான விஷயங்களை மறந்தும் தானம் செய்யக்கூடாது என்கிறார்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
1. சனிக்கிழமைகளில் நாம் வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யக்கூடாது. அதாவது பால், தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை நாம் தானம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். காரணம், இவை சந்திரன் மாற்றும் சுக்கிரனுடன் தொடர்புடையது அவ்வாறு அவர்கள் அந்த பொருட்களை தானம் செய்யும் பொழுது சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடும்.
2. அதே போல் அரிசியை சனிக்கிழமை அன்று தானம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது குடும்பத்தில் அமைதியின்மை, சண்டைகள் மன அழுத்தம் உருவாகும்.
3. சனிக்கிழமைகளில் நெய் மற்றும் வெண்ணை தானம் செய்யக்கூடாது. இதுவும் மிக பெரிய பாதிப்பை கொடுத்து விடும் என்கிறார்கள்.
4. மஞ்சள் நிறங்கள் பொருட்களையும் நாம் சனிக்கிழமைகளில் தானம் செய்யக்கூடாது. மஞ்சள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால் அவை தானம் செய்வது நமக்கு உகந்தது அல்ல என்கிறார்கள்.
5. அதே போல் சிவப்பு நிற பொருட்களையும் தானம் செய்யக்கூடாது. சிவப்பு நிற ஆடை, அல்லது சிவப்பு நிற தானியங்களை நாம் தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சனிக்கிழமைகளில் தானம் செய்யவேண்டிய பொருட்கள்:
ஆனால், சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். அவை சனி பகவானை மகிழ்விக்கும் விஷயமாகும். அதே போல் சனிபகவானை மகிழ்விக்க கடுகு எண்ணெய், அல்லது உளுந்தப்பருப்பு ஆகியவற்றை தானம் செய்வது நம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கிறது என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |