நாளை தை அமாவாசை அன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்
தை அமாவாசை என்பது நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மிக முக்கிய நாளாகும்.இந்த நாளில் முன்னோர்களின் அருளை பெற பலரும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.இவ்வளவு விஷேசமான நாளில் நாம் சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
அதாவது அன்றைய நாளில் நாம் பிறருக்கு தானம் செய்யலாம் ஆனால் ஒரு போதும் சில விஷயங்களை வாங்க கூடாது.அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
தை அமாவாசையில் வாங்கக் கூடாத பொருட்கள்:
நாளை தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு மட்டுமல்ல, சனி பகவானை வழிபடவும் உகந்த நாளாகும்.அதனால் அன்றைய நாளில் மகாலட்சுமிக்கு தொடர்புடைய துடைப்பம் வாங்க கூடாது.
மிக முக்கியமாக நாளைய தினத்தில் கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்கள், தானியங்களை அமாவாசை நாளில் வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
காரணம்,நாம் அன்றைய தினத்தில் என்ன பொருட்கள் வாங்கினாலும் அவை நேரடியாக நம் முன்னோர்களுக்கு சென்று சேரும் என்று கருதப்படுகிறது.ஆதலால் கோதுமை வாங்கினால் அது முன்னோர்களுக்கு படைத்தது போல் ஆகி விடும்.அவ்வாறு செய்வது நமக்கு மிகுந்த தீய பலன்களை கொடுக்கும்.
அதே போல்,மறந்தும் எண்ணெய் வாங்குவது, தலைக்கு எண்ணெய் வைப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்ற விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.தை அமாவாசை சனி பகவானுடன் தொடர்புடைய நாள் என்பதால் அமாவாசை நாளில் எண்ணெய் வாங்கினால் சனி தோஷம் ஏற்படும்.
மேலும்,நாளை முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய நாள்.ஆதலால் முதலில் அவர்களுக்கு உரிய வழிபாட்டை முழுமையாக முடித்த பிறகே நாம் தெய்வத்திற்குரிய வழிபாட்டை செய்யவேண்டும்.ஆக,அன்றைய நாளில் பூஜை பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி விடும்.
அதே சமயம்,சமையலுக்கு தேவையான கல் உப்பு வாங்க கூடாது.அது மகாலட்சுமிக்கு தொடர்புடையது.மேலும் கல் உப்பு மஹாலக்ஷ்மியின் 108 பொருட்களில் முக்கியமான பொருள் ஆகும்.ஆக,அன்றைய நாளில் கல் உப்பை வாங்கினால் அது மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். தை அமாவாசையில் வாசலில் கோலமிடுவது, உப்பு, மஞ்சள் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவது பித்ரு தோஷம் ஏற்பட செய்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |