நாளை சனிப்பெயர்ச்சி நாளில் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்
நாளை (29-03-2025) சனி அமாவாசையில் சூரிய கிரகணம் மற்றும் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அப்படியாக, இந்த நாளில் நாம் சில முக்கிய விஷயங்களை செய்ய தவிர்ப்பதால் நாம் சில நன்மைகள் பெறலாம். அதை பற்றி பார்ப்போம்.
1.நாளை சாமி சிலைகள் தொடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது சனி பெயர்ச்சி அன்று சாமி சிலைகளை தொட்டு வணங்குவது மிகவும் அசுப பலனாக பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய நாளில் சாமி சிலைகளை சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் மூடி வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு புனிதமான கங்கை நீர் அல்லது வேறு ஏதாவது தீர்த்தம் கொண்டு பூஜைகள் செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
2. இந்த நாளில் முடிந்த அளவு பிறரிடம் வீண் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது ஆன்மீகம் ரீதியாக நாம் பலம் இழக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
3.நாளை முடிந்த அளவு சூரியகிரகணத்தின் பொழுது வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு வீட்டிலேயே சுத்தமாக சமைத்து சாப்பிடுவது நன்மை வழங்கும்.
4. நாளை சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். மீன ராசி, குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற ராசி. ஆதலால் நாளை முடிந்த அளவு மீன ராசிக்காரர்கள் அடர்ந்த நிறங்கள் அல்லது கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.
சனி பகவானுக்கு கருப்பு நிற ஆடை பிடித்தமான ஆடை என்றாலும் சனி பெயர்ச்சி நேரத்தில் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வெள்ளை, மஞ்சள் அல்லது மென்மையான நிறங்களை அணிவது சிறப்பு.
5.நாளை முடிந்த அளவு தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காரணம் சனி பெயர்ச்சி என்பது தாமதங்கள், தடைகள், எதிர்பாராத சிரமங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அதனால் நாளை மேற்கொள்ளும் பயணங்கள் சில தீயா விளைவுகளை உண்டாக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |