நெருங்கியவர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் இந்த பொருட்களை இலவசமாக வாங்காதீர்கள்
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.அதனால்,நாம் செய்யும் செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லை மன சங்கடத்தில் முடியும் என்கிறார்கள்.
அப்படியாக நாம் எவ்வளவு நெருங்கியவர்களாக இருந்தாலும்,அல்லது சொந்த ரத்தமாக இருந்தாலும்,அவர்களிடம் சில பொருட்களை இலவசமாக வாங்க கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
உப்பு:
வாஸ்து சாஸ்திரத்தில் உப்பு சனியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.ஆதலால் ஒருவரிடம் உப்பு இலவசமாக பெற்றால் நமக்கு கடன் சுமை அதிகரிக்கும் என்கிறார்கள்.ஆக பிறரிடம் இதை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு வாங்கி உபயோகிக்கும் பொழுது நமக்கு உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் சில சங்கடம் உருவாகலாம் என்கிறார்கள்.
கைக்குட்டை:
இந்த கைக்குட்டை இலவசமாகவும் அன்பளிப்பாகவும் பிறரிடம் பெறக்கூடாது என்று அதிகம் பேர் சொல்லி கேள்வி பட்டு இருப்போம்.அவ்வாறு நாம் கைக்குட்டை அன்பளிப்பாக பெரும் பொழுது அந்த உறவு மிக பெரிய சண்டையில் முடியும் என்று சொல்லப்படுகிறது.அதை தொடர்ந்து குடும்பத்திலும் சில சிக்கல்களும் சண்டையும் வரலாம்.அப்படி கைக்குட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களிடம் அதற்குரிய பணம் கொடுத்து நாம் வாங்கி கொள்ளலாம்.
பர்ஸ்:
வாஸ்து ரீதியாக நாம் நெருங்கியவர்களுக்கு பர்ஸ் கொடுப்பதாலும்,அவர்களிடம் பரிசாக பெற்று கொள்வதாலும் நம்முடைய நிதி நிலையில் பல பிரச்சனைகள் உருவாகும்.மேலும்,அவை உறவு விரிசலையும் உருவாக்கலாம்.
தீப்பெட்டி:
தீப்பெட்டி ஒருபொழுதும் நாம் இலவசமாக பெறக்கூடாது.அவ்வாறு வாங்கும் பொழுது அவை வீட்டில் அமைதி இன்மை உருவாக்கும்.மேலும், ராகு கிரகத்தினால் வீட்டில் எதிர்பாராத பாதிப்புகள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |