ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். மேலும், நம்முடைய இந்து மதத்தில் திருமணம் நிச்சயம் செய்யும் முன் கட்டாயம் ஜாதகப்பொருத்தம் பார்ப்பதை அவசியமாகக் கொண்டு இருப்போம்.
அந்த வகையில் திருமணத்தில் பார்க்கப்படும் 10 பொருத்தத்தில் ஒரு சில பொருத்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் எட்டாவது பொருத்தம் தான் இந்த வசிய பொருத்தம். இந்த வசிய பொருத்தம் தான் மணமக்கள் அவர்கள் திருமண வாழ்வில் எவ்வளவு ஈர்ப்போடு இருப்பார்கள் என்பதை குறிப்பதாகும்.
அப்படியாக, பிற பொருத்தங்கள் இருந்தும் இந்த வசியபொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? அவ்வாறு செய்தால் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம். திருமண வாழ்க்கை என்பது நல்ல புரிதலோடும் அன்போடும் இருக்க வேண்டும்.
அதற்கு இந்த வசிய பொருத்தம் மிக முக்கியம் என்று சொல்கிறது ஜோதிடம். அவ்வாறு வசிய பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் மணமக்கள் அவர்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த வசிய பொருத்தமானது மணமக்கள் ஒருவரின் ராசி அமைப்புகளும் ஒன்றை ஒன்று புரிந்து நடந்து கொள்ளும் தன்மை உடையதா என்று பார்ப்பதே ஆகும். மேலும், இந்த வசிய பொருத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளது.
அவை உத்தமம் மற்றும் மத்திம். அதாவது ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமாக இருந்தால் மத்திம பொருத்தம் என்றும் பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக இருந்தால் உத்தமம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், சமயங்களில் இந்த வசிய பொருத்தம் இல்லாமலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்கிறார்கள். அதாவது, பெண் ராசியை வைத்து தான் வசிய பொருத்தம் பார்ப்பார்கள்.
அதனால் திருமணத்திற்கு பார்க்கப்படும் 10 பொருத்தத்தில் இந்த பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சில ஜோதிடர்கள் சொல்வது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |