வீடுகளில் விளக்கு ஏற்றும் திசை சரிதானா என்பதை எவ்வாறு தெரிந்துக் கொள்வது?
நம்முடைய இந்து மதத்தில் வீடுகளில் தினமும் பூஜை செய்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது தவறாமல் பின்பற்றக்கூடிய விஷயம் ஆகும். அப்படியாக, நாம் விளக்கு ஏற்றுவதற்கு முன்னால் அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில ஆன்மீக தகவல்கள் இருக்கிறது. அந்த வகையில் எந்த திசைகளில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் நாம் பெறலாம் என்று பார்ப்போம்.
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். தீபம் ஏற்றுவதால் நம்முடைய பாவங்கள் கரைகிறது, தோஷங்கள் விலகுகிறது. ஆதி காலம் முதல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதற்கு மிக சிறந்த அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
ஏன், எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர். அப்படியாக, எட்டு திசைகளில் தீபங்களை ஏற்றுவதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
கிழக்கு திசை :
ஜாதகத்தில் கிரகத்தினால் ஏற்படும் தோஷம் விலக கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது சிறந்த பலன் கொடுக்கும். அதோடு, இந்த திசையில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது நம்முடைய துன்பங்கள் விலகுவதோடு வீடுகளில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேற்கு திசை :
இந்த திசையில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது பணப்பிரச்சனை, கடன் சுமை இவை விலகும்.
வடக்கு திசை :
இந்த திசையில் விளக்கு ஏற்றும் பொழுது செய்யும் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கிறது. திருமண தடை விலகி நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.
தெற்கு திசை :
நாம் இந்த திசையில் மட்டும் விளக்கு ஏற்றக்கூடாது. இவ்வாறு ஏற்றுவது நமக்கு மரணபயத்தை கொடுத்து விடும்.
தென்கிழக்கு திசை :
இந்த திசையில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது குழந்தைகளின் படிப்பு சிறந்து விளங்குகிறது. மேலும், அவர்களின் ஆரோக்கியம் சிறக்கவும், புத்திக்கூர்மை உண்டாகவும் தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.
தென்மேற்கு திசை :
இந்த திசையில் நாம் தீபம் ஏற்றும் பொழுது திருமணத்தில் ஏற்பட்ட விரிசல் விலகும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.
வடகிழக்கு திசை :
இந்த திசையில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது குடும்ப தலைவரின் வாழ்வு சிறப்பாக அமையும். அதோடு குடும்பத்தில் ஏற்பட்ட திருஷ்டி, மன கவலைகள் விலகும்.
வடமேற்கு திசை :
இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரி ஒற்றுமை நிலவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |