பெண்கள் கிரிவலம் செல்ல உகந்த நாள் எது தெரியுமா?
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.அப்படியாக பலரும் பல இடங்களில் வந்து திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர்.அவ்வாறு செய்வதால் தீராத பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கையில் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அப்படியாக திருவண்ணாமலையில் ஒவ்வொரு நாளும் கிரிவலம் செல்ல அதற்கேற்ற பலன் கிடைக்கிறது.அந்த வகையில் ஒரு முறை மஹாலக்ஷ்மி தயார் தீபமாக திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இருக்கிறார்.அன்றைய தினத்தில் பெண்கள் கிரிவலம் செல்ல சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றனர்.அதை பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.அண்ணாமலையார் கோயிலில் தீபம் ஏற்றிய பிறகே மக்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாட்டை தொடங்குவார்கள்.அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் பெண்கள் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம்.
இதற்கு ஒரு புராண கதையும் இருக்கிறது.அதாவது ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு நிறைய செல்வங்களை வழங்க வேண்டும் என்று மகாலட்சுமியை தாயாரை வற்புறுத்தினார்களாம்.
ஆனால் திருமகள் அவர்களின் பேராசைக்கு இணங்காமல் அவர்களிடமிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறாள் அம்பாள்.அங்கு தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தாள்.அன்றைய தினம் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும்.
அதனால் இல்லற பெண்கள் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் லட்சுமி கடாட்சமும், இல்லற இன்பமும், அமைதியும், மாங்கல்ய பலமும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனகோளாறுகளை நீக்க வல்லது இந்த வெள்ளிக்கிழமை கிரிவலமாகும். எனவே இவ்வளவு விஷேசமான வெள்ளிக்கிழமை அன்று கிரிவலம் சென்று அண்ணாமலையார் அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |