காதல் கோயில்,முக்தி ஸ்தலம் என்ற பல சிறப்புகள் கொண்ட திருவிடைமருதூர் மகாலிங்கம்
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள திருவிடைமருதூர் ஜோதி மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இது சிவனே சிவனைப் பூசித்த திருத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பட்டினத்தார் ஆகியோர் பாடிப் பரவியத் திருத்தலம்.
தென்கரை காவிரித் தலங்களில் 30 ஆவது தலமாகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று வகையிலும் திருவிடைமருதூர் திருத்தலம் சிறப்புடையதாகும். திருவிடைமருதூருக்கு தபோவனம் முத்திபுரம், சக்தி புரம், செண்பகவனம் போன்ற பெயர்களும் உண்டு.
சப்த ஸ்தானம்/ ஏழூர் கோவில்
ஏழு முனிவர்கள் சிவனை வணங்கிய கோவில்கள் சப்தஸ்தானக் கோயில்கள் அல்லது ஏழூர் கோவில்கள் எனப்படும் திருவையாறு சப்த ஸ்தானம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் மயிலாடுதுறை சப்தஸ்தானம் கும்பகோணம் சத்ய ஸ்தானம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம் திருவள்ளூர் சப்தஸ்தானம் திருநீலக்குடி சப்தஸ்தானம் கஞ்சனூர் சப்தஸ்தானம் நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்று பல சப்தஸ்தானங்கள் உள்ளன.
திருவிடைமருதூர் திருநீலக்குடி, இளந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், மருத்துவக்குடி, ஆகிய ஏழும் சப்தஸ்தானங்கள் ஆகும். தளங்களுடன் சேர்ந்து.
பஞ்ச குரோசத் தலங்கள்
குரோச என்றால் காசிக்கு நிகரான என்று பொருள் பஞ்ச குரோசத் தலங்கள் என்பது காசிக்கு நிகரான ஐந்து சிவத்தலங்களைக் குறிக்கின்றது. அவை திருநாகேஸ்வரம் ,தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர், திருவிடைமருதூர் ஆகியன.
கும்பகோணத்திற்குத் தல யாத்திரை செல்பவர்கள் இந்த ஐந்து தலங்களுக்கும் ஒவ்வொரு நாள் தனித்தனியாகச் சென்று இறைவனைத் தரிசித்த பின்பே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலுக்குப் போய் இறைவனை வணங்க வேண்டும். சுற்றிலும் பல சிவத்தலங்கள் இருப்பதால் இத்தலத்தை மத்தியார்தலம் என்றும் அழைப்பார்கள்.
மருதம் - மருதூர்
சிவன் கோவில்களில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட மூன்று கோவில்கள் இந்தியாவில் உள்ளன. முதல் கோவில் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனர் கோவில் ஆகும். அர்ஜுனா என்பது மருத மரத்தை குறிக்கும் ஸ்ரீசைலத்தில் மருத மரமே ஸ்தலவிருட்சமாக உள்ளது.
இக்கோவில் மருதமரக் கோவில்களில் தலை கோவிலாகும். அடுத்த இரண்டு கோவில்களும் தமிழ்நாட்டில் உள்ளன. மருத மரக் கோவில்களில் இடைக் கோவில் என்பது திருவிடைமருதூர் கோவில் ஆகும். கடைக் கோவில் என்பது திருப்புடைமருதூரில் (புடார்ச்சுனம்) உள்ளது. இவ்வூர் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ளது.
சிவனும் அம்மையும்
திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோயிலில் கருவறைநாதரின் பெயர் ஜோதி மகாலிங்கம் ஆகும். இக்கோயிலில் சிவபெருமானின் இராவண அனுக்கிரக மூர்த்தி சிலை அமைந்துள்ளது. இச்சிலை திருவிடைமருதூரில் மட்டுமே உள்ளது.
இக்கோயில் அம்பாளின் பெயர் பிரகத சுந்தர குஜாம்பாள். பிரகத என்றால் உலகம் சுந்தரம் என்றால் அழகு குஜா என்றால் மார்பு, எனவே தமிழில் இவள் பெயர் பெரு நலமா முலையம்மை. இவளுக்கு வடபுறத்தில் மூகாம்பிகை சந்நிதி உள்ளது.
மூகாம்பிகை சன்னதி
கர்நாடகாவில் கொல்லூரில் மூகாம்பிகை கன்று ஒரு சந்நிதி உண்டு இது தவிர தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவில் மேலவீதியில் மூகாம்பிகைக்கு ஒரு கோவில் உண்டு திருவிடைமருதூரில் மூகாம்பிகை தனி சன்னதி கொண்டுள்ளார். இந்த அம்பிகையையும் இறைவன் திருமணம் செய்து கொண்டுள்ளதால் இத்திருத்தலம் திருமணத் திருத்தலமாக விளங்குகின்றது.
அன்பில் பிரியாள்
ஒருமுறை சம்பந்தர் இக்கோவிலுக்கு வந்த போது தரையெல்லாம் லிங்கங்களாகக் காட்சியளித்தன. அவருக்குத் தரையில் மிதித்து நடந்து கோவிலுக்குள் செல்வது சிரமமாக தோன்றியது. அவ்வேளையில் அன்னை பராசக்தி தன் குழந்தைக்கு உதவ முன் வந்தாள்.
சம்பந்தரை குழந்தையாகத் தூக்கிக் கொண்டு போய் பிரகாரத்துக்குள் விட்டாள். அவ்விடத்தில் மருதவாணருடன் தனிச் சன்னதியில் அம்பிகை எழுந்தருளினாள்.. இச்சந்நிதியில் இருக்கும் அம்பிகைக்குப் பெயர் அன்பில் பிரியாள் என்பதாகும்
காருண்யாமிர்த தீர்த்தம்
திருவிடைமருதூர் சிவன் கோயிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர் காருண்யாமிர்த தீர்த்தம். . சிவபெருமான் இத்தலத்தின் மகிமையைப் பார்வதியிடம் இறைவன் சொல்லிக் கொண்டிருந்தபோது பார்வதி மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுத்தாள். அவளுடைய கண்ணீர் இங்குத் தீர்த்தக்குளமாகப் பெருகியதால் இக்குளம் காருண்ய அமிர்த தீர்த்தம் எனப்பட்டது.
தெரு அழகு!
திருவாரூருக்குத் தேர் அழகு! வேதாரண்யம் விளக்கழகு! திருவிடைமருதூருக்கு தெரு அழகு! என்று சொலவடை உள்ளது. இங்குத் தெருக்களின் அமைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். காரணம், இத் தெருக்களில் ஒரு தேர் அல்ல ஐந்து தேர்கள் ஒரே நாளில் ஒரே வேளையில் ஆண்டுதோறும் பவனி வரும்.
எனவே இங்குத் தேரோடும் வீதிகள் அகலமாகவும் நீளமாகவும் சுத்தமாகவும் காணப்படும். இக்கோவில் தேர்த்திருவிழாவின் போது சாமி, அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என்று ஐவரும் ஐந்து தேர்களில் பவனி வருவர்.
லிங்கங்கள்
திருவிடைமருதூர் திருத்தலத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 27 நட்சத்திரத்திற்கு இருக்கும் 27 லிங்கங்கள் போக, காணும் இடமெல்லாம் லிங்கமயமாக காட்சி தரும் திருத்தலம் இதுவாகும்.
அகத்தியர் வணங்கி அகஸ்தீஸ்வரலிங்கம் ,கஷ்யப முனி வணங்கிய காசியபர் லிங்கம், சோழ மன்னன் வணங்கிய சோழலிங்கம், சேர மன்னன் வணங்கிய சேரலிங்கம், பாண்டிய மன்னன் வணங்கிய பாண்டிய லிங்கம், இவை தவிர சகஸ்ர லிங்கம் பஞ்சபூத லிங்கங்கள் என்று ஏராளமான லிங்கங்கள் இக்கோவிலில் உண்டு.
விநாயகர்
இக்கோவிலில் லிங்கங்களைப் போலவே விநாயகர் சிலைகளும் நிறைய காணப்படுகின்றன. தேர் சுற்றி வரும் நான்கு வீதிகளிலும் தனித்தனியாக நான்கு விநாயகர் கோவில்கள் உண்டு. பொதுவாகக் கோயில்களில் விநாயகருக்கு தான் முதல் பூசை உண்டு.
ஆனால் இக்கோவிலில் மட்டும் கருவறை நாதருக்குப் பூசை நடந்த பின்பே விநாயகப் பெருமானுக்கு பூஜை நடைபெறும். இக்கோவிலில் பூசை முறை மாறி உள்ளது
கதை 1
விபண்டக முனிவர் என்றொரு முனிவர் முற்காலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். எப்போதும் சிவ தியானத்தில் மூழ்கி இருப்பார். அவர் ஒருநாள் சிவபெருமானிடம் தைப்பூச நாளன்று காவிரி கரையில் உள்ள கல்யாணத் தீர்த்தத்தில் நீராடி திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டவர்கள் மனநலம் குணநலம் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று சிவனிடம் வேண்டிக் கொண்டார்.
சிவனும் முனிவர் கேட்ட வரத்தைத் தந்தருளினார். எனவே மனநலப் பாதிப்பு உடையவர்கள் மன அழுத்தம், மனக் குழப்பத்தினால் அவதிப்படுவோர் இக்கோவிலில் வந்து தொடர்ந்து வழிபட்டு வர திட சித்தம் பெற்று துணிச்சலோடு வாழ்வார்கள்.
அதன் பின்பு அவருடைய வாழ்க்கையின் நிமிர்ந்து நில் துணிந்து செல் என்பஅதே தாரக மந்திரமாக அமையும் தலபுராணம் தஞ்சாவூர் உள்ள கோவில்களில் சிவத்தலங்களில் திருவிடைமருதூருக்கு அதிக பக்தி பாடல்களும் புராணக்கதை பாடல்கள் உள்ளன.
ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் என்பவர் 3000 பாடல்கள் கொண்ட மிக நீண்ட தல புராணத்தை இக்கோவிலுக்குப் பாடியுள்ளார். தஞ்சை மாவட்ட கோவில்களில் திருவையாறு மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இரண்டு திருத்தலங்களுக்கு மட்டுமே அதிக பக்திப் பாடல்கள் உள்ளன.
கோபுரச் சிறப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் மற்றும் திருவிடைமருதூர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் ஆகிய இரண்டும் கோபுரச் சிறப்பு பெற்றவை ஆகும். இவை மதுரை, திருநெல்வேலியில் அமைந்திருக்கும் கோவில்களில் இருப்பதைப் போன்று கோவிலின் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் அமையப்பெற்றவை.
உப சந்நிதிகள்
திருவிடைமருதூர் கருவறை நாதருக்கு எதிரே நந்தி காணப்படுகின்றது. பிரகாரத்தைச் சுற்றி வரும் போது விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர், பைரவர், நடராஜர், துர்க்கை மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. நவகிரக சன்னதியில் நவக்கிரகங்கள் இடம் மாறி அமைந்துள்ளன.
ஜோடியுடன் தட்சணாமூர்த்தி
தட்சிண மூர்த்தி இக்கோவிலில் சாம்ப தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தன் மனைவியுடன் காட்சியளிக்கின்றனர். இக்கோலத்தில் இவரைக் கருவறைநாதரின் முன் மண்டபத்தில் காணலாம்.
பக்தர்களுக்குத் தனிச் சந்நிதி
தெய்வங்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் இத்திருக்கோயிலில் சந்நிதிகள் உண்டு. பட்டினத்தாருக்கு கிழக்கு கோபுரத்தின் கேளும் கீழேயும் அவருடைய சீடர் பத்திரகிரியாருக்கு மேற்கு கோபுரத்தின் கீழேயும் தனி சன்னதிகள் உள்ளன.
சோழ நாடு ஒரு சிவாலயம் திருவிடைமருதூர் திருத்தலத்தின் கருவறை நாதரை சுற்றி வரும் போது காணப்படும் ஒவ்வொரு தெய்வமும் சோழநாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலைக் குறிக்கின்றது.
நந்தி தேவர், திருவாடுதுறையையும் சோமாஸ்கந்தர் திருவாரூரையும் தட்சிணாமூர்த்தி திரு ஆலங்குடியையும் விநாயகர் திருவலஞ்சுழியையும் முருகன் சுவாமி மலையையும் சண்டேஸ்வரர் திருவாய்ப்பாடியையும் நடராசர் தில்லையம்பலத்தையும் பைரவர் சீர்காழியையும் நவக்கிரகம் அதன் ராஜ கிரகமான சூரியனுக்கு கோவில் உள்ள சூரியனார் கோவிலையும் குறிக்கின்றது. இவ்வாறு சோழநாட்டு கோவில்கள் அனைத்தையும் சுற்றி வந்த பலனை திருவிடைமருதூர் கருவறை நாதரை சுற்றி வருவதால் பெறலாம்.
நட்சத்திர சந்நிதி
திருவிடைமருதூரில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தகைய நட்சத்திர லிங்க சந்நிதி வேறு எங்கும் இல்லை.
கதை 2
27 நட்சத்திரங்களின் வழிபாடு திருவிடைமருதூரில் 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன. சந்திர பகவான் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாராவை காதலித்து அடைந்தான். இதனால் குரு சாபத்துக்கு ஆளானான்.
குரு சாபத்தின் தோஷம் விலக சிவனை நோக்கி இத்திருத்தலத்தில் தவம் இருந்தான். சந்திரனோடு சேர்ந்து அவனுடைய 27 மனைவிகளும் தவம் தனித்தனியாக லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தனர். இவர்கள் பிரதிஷ்டை செய்த 27 லிங்கங்கள் உள்ளன.
சந்திர ஸ்தலம்
உலகில் உள்ள அனைவருமே 27 நட்சத்திரங்களுக்குள் பிறந்தவர்கள் தான். எனவே எவருக்கு எந்த தோஷம் இருந்தாலும் இக்கோவிலில் வந்து வணங்க அந்த தோஷம் நிவர்த்தியாகும். மேலும் சந்திரனின் தோஷம் நீங்கிய தலம் என்பதால் இதற்கு சந்திர ஸ்தலம் என்ற சிறப்பும் உண்டு.
திருமணத் திருத்தலம்
அம்பிகை தன் தோஷம் நீங்க இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாள். சிவபெருமான் அவளுக்கு விமோசனம் அளித்ததுடன் அவளையே திருமணமும் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வைகாசி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இக்கோவிலில் நடைபெறும்.
மூகாம்பிகை சிவபெருமான் திருமணமும் தனியாக நடைபெறும். எனவே இத்தலம் திருமணத் திருத்தலம் ஆகும். மேலும் சிவாலயங்களில் அம்மன் சன்னதி சிவனுக்கு வலது பக்கம் அமைந்திருந்தால் சிவன் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பதாகக் கருதுவர். எனவே திருவிடைமருதூரும் திருமண திருத்தலம் ஆகும். மேலும் காதலருக்கு வெற்றி தரும் காதல் கோயிலும் ஆகும்
கதை 3
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே திருவிடைமருதூர் திருத்தலம் காதலர்களுக்கு ஏற்ற திருத்தலம் ஆகும். அவர்கள் தம் காதலில் வெற்றி பெற இத்திருத்தலத்திற்கு வந்து வணங்கிச் செல்லலாம். தஞ்சாவூரில் பாண்டியரிடம் தோற்றுப் போன மன்னன் அமரசிம்ம்ன் திருவிடைமருதூர் அரண்மனையில் தங்கியிருந்தான். அவன் மகன் பிரதாபசிம்மன் தன் தாய் மாமன் மகள் அம்மணியைக் காதலித்தான்.
அம்மணி தினமும் திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்து தன் காதல் நிறைவேறினால் இக்கோவிலுக்கு லட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக் கொண்டாள். அத்துடன் அந்த லட்சத்தில் ஒன்றாக தன்னுடைய உருவில் சிலை செய்து பாவை விளக்கு ஏற்றுவதாகவும் நேர்ந்து கொண்டாள்.
இறையருளால் அவள் காதல் நிறைவேறியது. திருமணம் நடைபெற்ற பின்பு தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக செய்யச்சொல்லி 120 அடி செண்ட்டிமீட்டர் உயரத்தில் கையில் விளக்கேந்திய பாவையை கோவிலில் நிறுத்தினாள். அவளே தினமும் சிலை ரூபத்தில் இறைவன் திருமுன் விளக்காக நிற்கின்றாள். அவள் மன்னர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளது தோளில் ஒரு கிளி உள்ளது.
மன்னர் குலத்தைச் சேர்ந்த பெண்களை அடையாளப்படுத்துவதற்கு கையில் அல்லது தோளில் கிளி வைத்திருப்பது சிற்ப சாஸ்திரத்தில் மரபாகும். மதுரையில் பாண்டியப் பேரரசியான மீனாட்சியின் தோளில் கையில் கிளி இருக்கும்.
பிரகாரங்கள் மூன்று திருவிடைமருதூர் கோவிலில் கருவறையை சுற்றி மூன்று பிரகாரங்கள் உள்ளன முதல் பிரகாரம் பிரணவ பிரகாரம் எனப்படுகின்றது சுற்றி வருவதால் முக்தி கிடைக்கும் இரண்டாவது பிரகாரம் இடையில் உள்ள பிரகாரமாகும்.
இதன் பெயர் கொடுமுடி பிரகாரம் சுற்றி வருவதால் சுற்றி வருவது சிவபுராணம் எழுந்தருளியிருக்கும் கைலாயத்தையே சுற்றிய புண்ணியம் கிடைக்கும் மூன்றாவது பிரகாரம் வெளிப்பிரகாரம் இதனை அஸ்வமேத பிரகாரம் என்பர் இப்ரகாரத்தை வளம் வரும் போது அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது.
கதை 4
சிவனை சிவன் வணங்குதல்
திருவிடைமருதூர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்ட உமாதேவி விநாயகர் முருகன் திருமால் லட்சுமி காளி சரஸ்வதி வே வசிட்டர் ரோமச முனிவர் அகத்தியர் சிவவாக்கியர் கபிலர் மற்றும் வரகுண பாண்டியன் ஆகிய எல்லோரையும் விட சிறப்பானவர் சிவபெருமான்.
இவர்ணிங்கு தன்னைத்தானே பூசித்தார். உமாதேவி, என்ன இது நீங்கள் உங்களையே பூஜித்து கொள்கிறீர்கள் என்று கேட்டபோது மற்றவர்கள் பூசனை சரியாக இல்லை அவர்கள் எவ்வாறு பூசிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் பூசித்துக் காட்டுகிறேன் என்றார்.
சிவபெருமான் தந்தையின் தானே பூசித்துக்கொண்ட இன்னொரு கோயில் மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவில் ஆகும். மீனாட்சி அம்மனை வென்ற சொக்கநாதர் முடி சூட்டிக்கொள்ளும் முன்பு சிவ பூஜை செய்தார். சிவபெருமான் தன்னைத் தானே பூசித்துக்கொண்ட புடைப்புச் சிற்பம் இக்கோயில் கருவறையில் காணப்படுகின்றது.
வணங்கி வழிபட்டோர்
அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் கபில முனிவர் மார்க்கண்டேயர் ரிஷி ரோமரிஷி அகத்திய முனிவர் பத்திரகிரியார் வசித்தார் லட்சுமி சரஸ்வதி பார்வதி விநாயகர் முருகன் திருமால் ஆகியோர் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை வணங்கி அருள் பெற்றவர் ஆவர். பத்ரகிரியார் முக்தி பெற்ற திருத்தலம் இதுவாகும். இக்கோயில் முக்தி தலம் ஆகும்.
கதை 5
தோஷம் நீங்கும் திருத்தலம்
மற்ற சிவத்தலங்களுக்கு உள்ள கதை ஸ்தல புராணக் கதை போல திருவிடைமருதூர் திருத்தலத்திற்கும் ஒரு கதை வழங்குகின்றது. பாண்டிய நாட்டை ஆண்டு வந்த வரகுண பாண்டியன் ஒருநாள் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றான். வேட்டை முடித்து அவன் தன் ரதத்தில் ஏறி விரைந்து வரும்போது அவனை அறியாமல் ஓர் அந்தணனை தேர்ச்சக்கரம் நசுக்கிவிட்டது.
இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இவ்வேளையில் சோழ மன்னனும் பாண்டியன் மீது படை தொடுத்தான். பாண்டியன் சோழனுடன் போரிட்டு அவனை அவனுடைய ஊர் வரை விரட்டி வந்தான். அவ்வாறு வந்தவன் இடையில் இருந்த திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டான்.
வரகுணபாண்டிய மன்னன் கோவிலுக்குள் கால் வைத்ததும் அவனைப் பிடித்து இருந்த பிரம்மஹத்தி விலகியது. மன்னன் தான் கோவிலை விட்டுத் திரும்பவும் கிழக்கு வாசல் வழியே வெளியேறினால் அங்குத் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பிரம்ம ஹத்தி தன்னை மீண்டும் பிடித்துக் கொள்ளும் என்ற பயத்தில் மேற்கு வாசல் வழியாக வெளியேறி விட்டான். மன்னனை விட்டு விலகிய பிரம்ம ஹத்திற்கு சிவன் சந்நிதியின் இரண்டாம் கோபுரத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பாவமும் தோஷமும் தீரும்
திருவிடைமருதூர் திருக்கோவில் தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும் பல்வேறு தோஷங்களால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனைத் தொடர்ந்து வழிபட்டால் அவர்களின் தோஷம் நீங்கி நன்மை அடைவார்கள்.
பத்திரகிரியார் முத்தி பெற்ற ஸ்தலம் என்பதால் இத்தலம் முத்தி ஸ்தலமாக விளங்குகின்றது வழிபாட்டின் பலன் திருவிடைமருதூர் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டால் மோட்சம் கிட்டும். பிறப்பறுக்கும். பிறவா பெரும்பயன் நல்கும். பிறவிக் கடலை நீந்த இயலும். இழந்த பதவி கிடைக்கும்.
காதலில் வெற்றி கிடைக்கும். தன்னை அறியாமல் தன் தேர்ச் சக்கரத்தில் ஒரு அந்தணனை நசுக்கிக் கொன்ற வரகுண பாண்டியரின் சாபம் தீர்த்த தலம் என்பதால் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் தேடுவோர் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்களின் பாவம் விலகும்.
விழாக்கள்
ஐப்பசி மாதத்திலும் தை மாதத்திலும் திருவிடைமருதூரில் சிறப்பான வழிபாடுகள் உண்டு. வைகாசி மாதத்தில் வசந்த விழா பின்பு அறுபத்து மூவர் விழா நவராத்திரி விழா மார்கழித் திருவாதிரை தைப்பூசம் ஆகிய சிறப்பு வழிபாடுகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
தைப்பூசத்தன்று சுவாமி காவேரி கரைக்கு வந்து ஐராவணறையில் தீர்த்தம் கொடுக்கும் சிறப்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகின்றது .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |