விரதத்தில் மிக சிறந்த விரதம் எது தெரியுமா?
மனிதனுடைய பிறப்பே இன்ப துன்பங்களை கற்று தெளியவே. அப்படியாக, மனிதன் அவன் அதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த சிக்கல்களில் இருந்து விடுபட ஒரே வழி இறைவழிபாடு தான்.
மேலும், சமயங்களில் நாம் முக்கியமான விஷேச நாட்களில் விரதம் மேற்கொண்டு இறைவழிபாடு செய்வதுண்டு. அந்த வகையில் இறைவழிபாட்டில் எத்தனை விரத நாட்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு விரத தினம் இருக்கிறது.
அந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு ஏற்பட்ட எப்பேர்ப்பட்ட துன்பங்களும், மன கவலைகளும் விலகும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
மனிதர்களை ஆடவைத்து அவன் ஆட்டத்தை அடக்கி, அவனுக்கு தகுந்த பாடம் கற்பிப்பது தான் இறைவனின் செயல். அப்படியாக, சொல்லுக்கு சொல், செயலுக்கு செயல் என்று நீதி நேர்மை தவறாது அருள் வழங்குபவர் பெருமாள். அவரை சரண் அடைய உலகம் ஒரு மாயை என்ற புரிதல் ஏற்பட்டு மோட்சம் கிடைக்கும்..
அந்த வகையில் விரதங்களில் மிக முக்கியமான விரதம் தான் பெருமாளுக்கு உரிய திருவோணம்ஆகும். நாம் மற்ற விரதங்களை கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும் பெருமாளுக்கு உரிய முக்கியமான இந்த ஒரு விரதத்தை கடைப்பிடித்தாலே போதும் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் தேடி வரும்.
அதோடு, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், வீட்டில் உள்ள தரித்திரம் விலகி ஐஸ்வர்யம் பெருகும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருவோண நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து கஷ்டங்களும் விலகி மனதில் தெளிவு பிறக்கும் என்கிறார்கள்.
அப்படியாக, திருவோண விரதம் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் திருமாலை வழிபாடு செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் மனம் முழுவதும் பெருமாளின் நாமங்கள் ஒலிக்க செய்யவேண்டும்.
சிலரால் இந்த விரதம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் அன்றைய நாள் பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்து பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி தங்களுடைய பிரார்த்தனை வைக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் அவர்கள் சந்தித்த கடன் தொல்லைகள் எல்லாம் விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும், திருவோணம் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும்.
அதோடு, எவர் ஒருவர் 12 திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களும் செல்வங்களும் பெற்று மோட்சம் அடைகிறார் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |