இந்த 2 ராசிகள் எப்பொழுதும் படிப்பில் நம்பர் 1 மாணவர்கள் தானாம்- யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் உண்டு. அவர்கள் பிறந்த ராசியின் குணத்தை நாம் அதிக நேரம் அந்த நபரிடம் காணலாம். அப்படியாக ஒரு சிலருக்கு படிப்பில் மிக அதிகமான ஆர்வம் இருக்கும். படிப்பில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்பார்கள்.
இதற்கு அவர்களுடைய ராசியின் அமைப்பும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியாக ஜோதிடத்தில் இந்த 2 ராசியில் பிறந்தவர்கள் படிப்பில் எப்பொழுதும் நம்பர் 1 மாணவராக இருப்பார்களாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான். இவர் தான் ஒரு மனிதனுடைய கல்வி மற்றும் அறிவாற்றலுக்கு காரணியாக இருக்கக்கூடியவர்கள். ஆதலால் மிதுன ராசியில் பிறந்த பிள்ளைகள் எப்பொழுதும் படிப்பில் சுட்டியாக இருப்பார்கள். இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் நானே முதல் இடத்தை வகிக்க வேண்டும் என்று அதிகமாக போராடி படிக்கக்கூடிய ஒரு மாணவராக இருப்பார்கள். அதே சமயம் இவர்கள் படிப்பில் மிக உயர்ந்த நிலைக்கும் தொழில் மற்றும் வேலைகளில் மிக உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய ஒரு அம்சம் பெற்றிருப்பார்கள்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதியும் புதன் பகவான் தான். ஆதலால் கன்னி ராசியில் பிறந்தவர்களும் அதிக அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்வுகளை தாண்டி அறிவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கக் கூடியவர்கள். இவர்கள் கணக்கு மற்றும் அறிவியல் ரீதியாக நிறைய ஆர்வம் கொண்டு நிறைய தேடிப் படிக்கக்கூடிய மாணவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் துல்லியமான ஒரு அறிவை நாம் பார்க்க முடியும். வகுப்பிலும் கல்லூரி காலங்களிலும் தொழில் செய்யும் இடங்களிலும் இவர்கள் முதன்மை வகிப்பதை நாம் காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |