இந்த 3 ராசியில் பிறந்தவர்கள் கர்ணனை போல் கேட்டவுடன் உதவி செய்பவர்களாம்
ஜோதிடத்தை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ராசி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்களும் பலன்களும் இருக்கும். ஒரு மனிதருடைய குணம் பெரும்பாலும் அவர்களுடைய ராசி நட்சத்திரத்தை பொருத்தே சமயங்களில் வெளிப்படுவதை நாம் காண முடியும். அந்த வகையில் ஒரு சிலருக்கு இயல்பாகவே பிறருக்கு உதவ வேண்டும் என்று குணம் இருக்கும்.
அதாவது ஒரு சில ராசியில் பிறந்தவர்கள் மகாபாரதத்தில் வரக்கூடிய கர்ணனை போல் கேட்டவுடன் அவர்களிடம் இருக்கக்கூடிய பொருளை கொடுத்து அல்லது பிறரிடம் கடன் வாங்கியாவது உதவி செய்யக்கூடிய ஒரு அற்புதமான மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
கடகம்:
சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடகு ராசியினருக்கு பிறப்பிலே அவர்களுக்கு தாய்மை குணம் அதிகம் இருக்கும். இவர்கள் எல்லோரிடத்திலும் இரக்க குணம் காட்டுவார்கள். மேலும் இவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுடைய கோபத்தை வெளி காட்டாத நபராக இருப்பார். கடக ராசியில் பிறந்த நபர்களிடம் ஒருவர் சென்று தனக்கு உதவி என்று கேட்டால் மனம் பொறுக்காமல் தங்களிடம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் உதவி செய்ய முயற்சி செய்வார்கள்.
தனுசு:
குருபகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசியினர் பிறருக்கு நன்மை தீமைகளை எடுத்து சொல்வதில் குரு போல் இருக்கக் கூடியவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போல் இருந்தாலும் இவர்கள் சுற்றி நடப்பதை மிக உன்னிப்பாக கவனித்து செயல்பட கூடியவர்கள். இவர்கள் மனதில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும், பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணங்கள் நிறைந்திருக்கும். ஆதலால் தனுசு ராசியினரிடம் உதவி என்று கேட்டால் அவர்களால் முடிந்த உதவியை கட்டாயம் இல்லை என்று சொல்லாமல் செய்யக் கூடியவர்கள்.
மீனம்:
மீன ராசியினருடைய அதிபதியும் குரு பகவான் தான். இவர்கள் பலருக்குத் தெரியாத உதவியை ஒவ்வொருவருக்கும் இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள். அதாவது மீன ராசியினர் செய்யக்கூடிய உதவி அவ்வளவு எளிதாக வெளியில் இருக்கக்கூடிய நபர்களுக்கு தெரியாத அளவு முன்வந்து உதவி செய்யக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றல் பெற்றவர்கள். இவர்கள் நீதியாகவும் நேர்மையாகவும் தர்மத்தோடும் நடக்கக் கூடியவர்கள். கட்டாயம் மீனராசியினர் தங்களை சுற்றி உள்ளவர்கள் யாரும் துன்பப்பட கூடாதென்று எண்ணி அவர்கள் நிறைய உதவிகள் செய்வதையும் நாம் பார்க்க முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |