பிறரிடம் உண்மையாக பழகக்கூடிய 3 ராசிகள் யார் தெரியுமா?
மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான குணங்களில் விசுவாசம் ஒன்று. இந்த குணம் தான் அந்த மனிதன் மேல் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்படுத்தும். அப்படியாக, ஜோதிடத்தில் இயற்கையாகவே மிகவும் உண்மையாக பழகக்கூடிய ராசிகள் யார் தெரியும் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினர் ஒருவரிடத்தில் பழகும் பொழுது மிகவும் அன்பாகவும் உண்மையாகவும் பழகுவார்கள். இவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள். மேலும், இவர்களை நம்பி எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதை அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கக்கூடியவர்கள். அதேப்போல் இவர்கள் பிறரை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். யார் எப்படியோ அவர்களை அவ்வாறே ஏற்று கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
கடகம்:
கடக ராசியினர் மிகவும் உண்மையாக பழகக்கூடியவர்கள். இவர்களின் நட்பிற்கும் இவர்களை நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உண்மையாக இருந்து அந்த உறவை கொண்டு போக வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் எப்படி பிறருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதே போல் இவர்களிடம் பழகுபவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். இவர்களிடம் பகிர்ந்து கொண்ட ரகசியத்தை இவர்கள் எந்த கால சூழ்நிலையிலும் வெளியே சொல்வது இல்லை.
சிம்மம்:
சிம்ம ராசியினர் எப்பொழுதும் உண்மையை விரும்புவார்கள். இவர்களுக்கு போலித்தனமான முகமும் ஏமாற்றுவதும் பிடிக்காது ஒன்று. இவர்களை சுற்றி உள்ளவர்களை சிம்ம ராசியினர் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள். சமுதாயத்தில் சிம்ம ராசியினர் மீது பலருக்கும் அதிக மரியாதை இருக்கும். இவர்கள் நேர்மையாகவும் சிறந்த பண்புகள் கொண்டும் பழகக் கூடியவர்கள்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







