திடீர் என்று கண் திறந்த அம்மன் சிலையால் பரவசமான பக்தர்கள்- எங்கு தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திசையன்விளை என்னும் ஊர். அங்கு தெற்கு மாரியம்மன் என்ற ஆலயத்தில் வழக்கம் போல் இரவு பூஜைகள் முடிந்து இரவு நடை சாற்றி கோயிலை பூட்டி சென்றனர்.
ஆனால் அம்மனை காண ஓடோடி வந்த பக்தர் கோயில் நடை சாற்றியதை அடுத்து, எப்படியாவது அம்மனை தரிசனம் செய்யவேண்டும் என்று கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
அப்பொழுது, யாருக்கும் காண கிடைக்காத காட்சியாக அம்மன் கண் திறந்திருக்கும் காட்சி கிடைத்தது. அதை பார்த்து அவர் பக்தி பரவசத்தில் மூழ்கினார். அதோடு மட்டும் அல்லாமல் அவர் தான் பார்த்த காட்சியை பிறரும் பார்க்க வேண்டும் என்று அவருடைய செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டார்.
அதை பார்த்து பலரும் உடனே சுவாமியை தரிசனம் செய்ய கோயில் அருகே குவிந்தனர்.
மறுநாள் காலை வேளையிலும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், அம்மனுக்கு பூசாரி பால் அபிஷேகம் செய்தார் என்றும் கண் திறந்து இருந்த அம்மனை பார்த்து அருள் பெற பலரும் பக்தி பரவசத்தோடு வந்தார்கள் என்று தெரிவித்தார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |