தோஷங்களை போக்க எளிய வழிமுறைகள்
தோஷம் என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும்,தோஷம் ஒருவரது வாழ்வில் இருக்க அது அவரக்ளுக்கு காரிய தடையை உண்டாக்கும்.பலரும் இந்த தோஷத்தால் வாழ்க்கையில் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.
அதாவது எந்த காரியம் எடுத்தாலும் அதில் தடங்கல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.திருமணம்,படிப்பு,உறைவுமுறை என்று எல்லாவற்றிலும் தடங்கல் ஏற்படும்.அது அவர்களுக்கு மன உளைச்சல் உண்டாக்கும்.
அப்படியாக வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும் நாம் தூய்மையான மனதோடு இறைவனை பிராத்தனை செய்ய எல்லாம் ஒவ்வொன்றாக சரி ஆகும்.அந்த வகையில் நாம் தோஷம் கழிக்க சில பரிகாரம் செய்வோன்.ஆனால் தேடி சென்று பரிகாரம் செய்யாமல் நம்முடைய அன்றைய வாழ்வில் செய்யக்கூடிய விஷயத்தால் தானாகவே சில தோஷம் விலகுகிறது.அதை பற்றி பார்ப்போம்.
1. நாம தூங்கும் பொழுது படுக்கை அறையில் தலை அருகே கொஞ்சம் நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்கிர தோஷம் படிப்படியாக குறையும்.
2. மேலும்,நாம் இந்துக்களில் பசுவை மஹாலக்ஷ்மி தேவியாக பாவித்து வழிபாடு செய்வோம்.அந்த வகையில் அடிக்கடி பசுவிற்கு வாழைப்பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.
3. அதே போல் மனதார உதவி செய்வது என்பது பல ஜென்மத்திற்கு நமக்கு புண்ணியம் சேர்த்து கொடுக்கும்.அப்படியாக வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தால் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.
4. ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.
5. கர்மவினைகளை முற்றிலுமாக அழிக்கக்கூடியவர் சிவபெருமான்.சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
6. திருமணம் என்பது ஒரு ஆண் பெண்ணிற்கு நடக்க இருக்கும் முக்கியமான நிகழ்வு.ஆனால் அந்த நிகழ்வை நடத்த பல ஏழை குடும்பங்களுக்கு வசதி இருப்பது இல்லை.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவினால் அவர்களின் மகிழ்ச்கி நமக்கு ஆசீர்வாதமாக அமையும்.
அதே போல் நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகங்களையும் தரும்.
7. கல்வி இன்றியமையாத ஒன்று.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.
இவை எல்லாம் மனதார செய்ய நம்முடைய துன்பம் எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |