தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயலுக்கு உண்டாகும் தோஷங்கள்
ஒரு சில செயல்களை நாம் செய்யும் போது அது நல்ல செயலாக இருந்தாலும், அந்த செயலை செய்வதால் ஒரு சில சிறு தோஷங்கள் உண்டாகிவிடும், அவற்றால் பெரிய கெடுபலன்கள் இல்லையென்றாலும், சிறு சிறு கெடுபலன்கள் உண்டாக்கிவிடும்.
எனவே அனைவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய சிறு தோஷங்கள் பற்றி பார்ப்போம்.
நாம் ஒரு கோயிலுக்கு என்று எடுத்த சென்ற மனதில் நினைத்த பொருட்களை அங்கே சேர்த்து விடவேண்டும், அதை மற்ற கோயிலுக்கு எடுத்து செல்ல கூடாது
நாம் வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவை கோயிலில் அமர்ந்து உண்ணும் முன் அங்கே உள்ள ஒரு தெய்வத்திற்கு படைத்தது விட்டு உண்ணவேண்டும்.
மண்,அல்லது மற்ற உலோகத்தினால் ஆன விளக்கில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.
திருஷ்டி கழித்த பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
வீட்டில் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
வெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
இவை எல்லாம் நாம் செய்யும் செயலில் செய்யக்கூடிய சிறிய மாற்றம் தான். இதை கடைபிடித்து சிறு சிறு தோஷங்களில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்வோம்.