மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற வியாழக்கிழமை பரிகாரம்
வியாழக்கிழமை ஒரு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெற நாம் சில பரிகாரங்கள் செய்ய வாழ்க்கையில் பண தட்டுப்பாடுகள் இல்லாமல் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். அந்த வகையில் வியாழக்கிழமை என்பது குருவுடன் தொடர்புடைய நாளாகும்.
ஒன்பது கிரகங்களில் முக்கியமானது குரு என்னும் வியாழன் கிரகமாகும். மேலும் வியாழக்கிழமை விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைகிறாள்.அன்னை லட்சுமியின் அருள் கிடைத்தால் அவர்களுக்கு பணமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
விஷ்ணு பகவான் மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடங்கல்களும் விலகும். இந்த பரிகாரம் செய்ய வியாழக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு விஷ்ணுவையும், அன்னை லட்சுமியையும் ஒன்றாக வழிபடவேண்டும்.
இப்படிச் செய்வதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் தானம் இல்லாமல் எந்த விரதமும், சடங்கும் நிறைவடையாது.வியாழக்கிழமை அன்று குங்குமம், சந்தனம் அல்லது மஞ்சளை தானம் செய்யலாம்.
தோஷம் நீங்க, வியாழக்கிழமை அன்று குளிக்கும் பொழுது ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்துக் குளிக்கவும். மேலும் குளிக்கும் போது, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். முடிந்தால் வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்.
குரு பகவானுக்கு உகந்த நிறமாக மஞ்சள் நிறம் இருக்கிறது. மேலும் ஒருவர் வியாழக்கிழமை அன்று விரதம் இருந்து வாழைக்கன்றுக்கு நீர் ஊற்றினால் திருமணத்தடை விலகும்.திருமணம் ஆனவர்களுக்கு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
விஷ்ணுவை வழிபடும் போது, அவருக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பூக்களுடன் துளசியினால் அர்ச்சனை செய்து வழிபடவும்.இவ்வாறு வழிபட்டு வர அன்னை மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |