திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 17ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வருடாந்திர தெப்ப உற்சவ விழா நடக்கிறது.
விழா நாட்களில் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
முதல் நாளில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
2 ஆம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கடைசி மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21ஆம் திகதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கடைசி மூன்று நாட்களில் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த நாட்களில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தபின், சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்தவகையில், 20 ஆம் திகதி இரவு கஜ வாகன சேவையும், 21 ஆம் திகதி இரவு கருட வாகன சேவையும் நடைபெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |