தீபாவளி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
இந்து மத பண்டிகையில் தீபாவளி மிக முக்கியமான பண்டிகை ஆகும். இந்த நாளில் எல்லோரும் காலையில் தலைக்கு நல்லஎண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து இனிப்பு பலகாரம் உண்டு மகிழ்வோம். அப்படியாக, தீபாவளி அன்று நாம் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
இவ்வாறு இந்த மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைப்பதாக சொல்கிறார்கள். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது ஆண்கள் முன் கிழக்கு நோக்கி அமர்ந்து எண்ணெயை 7 தடவை பூமியிலும், பெண்கள் 5 தடவை பூமியில் பொட்டாக வைத்து விட்டு தலையில் தடவிக் கொண்டு வெந்நீரில் சீகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அப்படியாக, ஆண்கள் தலையில் எண்ணெய் வைத்து கொண்டு கங்கா தேவியை நினைத்து கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டும். "அஸ்வத்தாமா பலா வ்யாஸோ ஹனுமான்ச விபீஷண க்ருப பரசு ராமஸ்ச ஸப்தை தே சிரஞ்ஜீவன".
அதோடு பெண்களும் தலையில் எண்ணெய் வைத்து கொண்டு கங்கா தேவியை மனதில் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும், "அகல்யா த்ரௌபதீதாரா சீதா மந்தோ தரீததா பஞ்சகன்யா ஸ்மரேந்நித்யம் மஹாபாதக நாசனம்"
இவ்வாறு குளிக்கும் பொழுது இந்த மந்திரங்கள் சொல்வதானால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் யாவும் விலகுமாம். அதோடு நாம் தீபாவளி அன்று கட்டாயமாக குளித்து விட்டு புத்தாடைகள் அணிவோம்.
அவ்வாறு புத்தாடை அணியும் பொழுது "தீப தேவி மகா சக்தி சுபம் பவது மேசதா ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய ஓம் நமசிவாய" இந்த மந்திரத்தை 3 முறை சொல்லி அணிந்து கொண்டால் நமக்கு கடவுளின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும்.
மேலும், பூஜை அறையில் மகாலட்சுமி தேவிக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யும் பொழுது "ஓம் மகாலட்சுமி சவித்மஹே ஸ்ரீவிஷ்ணு பத்னிச தீமஹி தன்னோ: லக்ஷ்மி பிரசோதயாத்" என்று சொல்லி குடும்பத்துடன் வழிபாடு செய்தால் லட்சுமி தேவி அருளால் குடும்பத்தில் உள்ள பொருளாதார கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







