காண கிடைக்காத காட்சி- மதுரை மீனாட்சி அம்மனை இந்த நாளில் மட்டும் தரிசனம் செய்ய தவறாதீர்கள்
மதுரையை ஆளும் அரசி அன்னை மீனாட்சி ஆவாள். பாண்டிய குல பேரரசியான அவளை காண பல்வேறு ஊர்களிலும் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அப்படியாக அன்னையின் ஒரு முறை தரிசனம் நமக்கு கிடைத்தாலே நம் வாழ்க்கையில் பல்வேறு அதிசயங்களும் திருப்பங்களும் நடைபெறும்.
தற்பொழுது வரை மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் மீனாட்சி அம்மன் பேரரசியாகவே அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவ்வாறு சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளிக்கும் மதுரை மீனாட்சி அம்மனின் நகைகளான தங்கம். வைரம், வைடூரியம், நவரத்தினம். கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்கம் ஆகியவை பாண்டியர் ஆட்சி காலத்தில் மதுரை மீனாட்சிக்கு காணிக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அவ்வளவு சிறப்பு நம் மீனாட்சி அம்மனுக்கு இருப்பது நம் மதுரைக்கு மட்டுமல்லாமல் நம்முடைய தமிழ்நாட்டுக்கே பெருமை.
இவ்வாறாக அம்மனுக்கு பல அலங்காரம் செய்தாலும் குறிப்பாக வைர கிரீடம் மற்றும் தங்க கவசத்தை 365 நாட்களில் ஒரு சில நாட்களில் மட்டும் மீனாட்சியம்மனுக்கு அணியப்படுகிறது. அதாவது தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தை அமாவாசை தீபாவளி போன்ற தினங்களில் மட்டும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் மற்றும் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.
இதில் வைர கிரீடம் 3500 கிராம் எடை கொண்டதாகும். இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 கேரட் எடை உள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர எட்டரை கேரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும் அதை இடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் 14 அரை அங்குலம் அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம் ஆகும். இவை சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயமாகும்.
மேலும் 7 ஆயிரம் கிராம் எடை கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் தங்க கவசம் மற்றும் வைர கிரீடம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மீனாட்சி அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நம்மை ஆளும் தெய்வம் நமக்காக உடன் நிற்கும் தெய்வம் மதுரையாலும் அரசி மட்டும்தான்.
அவளை இந்த தரிசனத்தில் நாம் கண்டால் நம் வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை பெறுவதோடு பொருளாதாரத்தில் முன்னேற்றமும் வாழ்க்கையில் சுபிட்சமும் கிடைக்கும். முடிந்தவர்கள் கட்டாயம் இந்த தரிசனத்தை தவிர விடாதீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







