தற்கொலை செய்யும் வேளையில் காப்பாற்றிய சஷ்டி கவசம், திருச்செந்தூரில் நடந்த அதிசயம்
முருகன் என்றாலே அவருடைய ஆறுபடை வீடுகளும், அவரின் மயிலும், வேலும் கந்த சஷ்டி கவசம் தான் நினைவுக்கு வரும்.
முருக பெருமான் தன் பக்தர்களுக்கு நிகழ்த்திய அதிசயங்கள் பல... முருகா என்று கூப்பிட குரலுக்கு முருகன் வேலுடன் ஓடி வந்து இன்னல்களை தீர்ப்பார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அப்படியாக முருகனுக்கு எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் காலையிலும் மாலையிலும் எல்லா கோவில்களிலும், பக்தர்களில் உதடுகளிலும் ஒலித்து கொண்டு இருக்கும் கந்த சஷ்டி கவசம் உருவான கதை மிக சுவாரசியம், அதை பற்றி பார்ப்போம்
பாலா தேவராய ஸ்வாமிகள் என்பவர் மிகுந்த முருகர் பக்தர். அவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. பல முயற்சிகள் செய்தும் வைத்தியம் பார்த்தும் வலி தீரவில்லை.
மிகுந்த மன வேதனையில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் செல்கின்றார்.
அந்த வேளையில் அங்கு திருவிழா நடந்து கொண்டு இருந்தது. அந்த திருவிழாவை கண்ட பாலா தேவராய ஸ்வாமிகளுக்கு சற்று மனம் மாறி தற்கொலை செய்யும் எண்ணத்தை விடுத்து கடலில் நீராடிமுதலில் முருகனை தரிசனம் செய்கிறார்.
பின்பு தியானத்தில் அமர்ந்த அவருக்கு முருகன் காட்சி கொடுத்து கந்த சஷ்டி பாடும் திறனையும் கொடுத்தார்.
அடுத்த கணமே மனதில் பக்தி பிரசவ வெள்ளத்தில் கவசம் பிறந்தது. பின்பு மற்ற ஐந்து படை வீடுகளிலும் கவசம் பாடி முடித்தார். பாடி முடித்த அவருக்கு தீராத வயிற்று வலியும் தீர்ந்தது.
பின்பு தான் உணர்ந்தார் வயிற்று வலிக்கும் தற்கொலை செய்ய திருச்செந்தூர் வந்த காரணமும் முருகன் திருவிளையாடல் என உணர்ந்து ஆனந்த கண்ணீரில் உறைந்தார்.
மேலும் ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, பதினாறு பெற்று நீண்ட நாள் வாழலாம்.
மேலும் நவகிரகங்கள் நன்மைகள் அளிப்பார்கள். குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் முருகனே வந்து குழந்தையாக பிறப்பார் என்று நம்பபடுகிறது.
ஆதலால் எத்தனை துயரம் வந்தாலும் நம்பிக்கை வைத்து கடவுள் அந்த துன்பத்தில் நல்ல பாதை காட்டுவார் என்று மனதார நம்பினால் எல்லாம் நன்மையாக அமையும்.
மேலும் பயம் வருகின்ற பொழுது சஷ்டி கவசத்தை படித்தால் வாழ்க்கையில் தைரியம் பிறக்கும்.